Advertisement

வங்கியில் 760 காலியிடங்கள்

தனியார் துறை சார்ந்த மூன்றாம் தலைமுறை வங்கிகளில் ஐ.டி.பி.ஐ., முக்கியமானது. நாடு முழுவதும் கிளைகளைக் கொண்ட இவ்வங்கியில் எக்சிகியூடிவ் பிரிவில் 760 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது : விண்ணப்பதாரர்கள் 2018 ஜன., 1 அடிப்படையில் 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு: முதல் வருடத்தில் மாதம் ரூ.17 ஆயிரமும், இரண்டாவது வருடத்தில் ரூ.18,500ம், மூன்றாவது வருடத்தில் ரூ.20 ஆயிரமும் கன்சாலிடேட்டடு முறையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 700 ரூபாய்.
தேர்ச்சி முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.
தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 2018 பிப்., 28.
விபரங்களுக்கு : www.idbi.com/pdf/careers/FinalDetailedAdvertisementforpostofExecutive201805022018.pdf

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement