Advertisement

செப் ஸ்பெஷல்: ஆவாதி ஸ்டைல் இறால் கறி!

பிரியாணியோ, கெபாப் உணவோ, ஆவாதி ஸ்டைலில் தயாரிக்கப்படும் உணவுகள் தனிச்சுவை கொண்டவை. ஆவாதி முறை சமையலில், எந்த ஒரு வாசனை அல்லது சுவை கூட்டும் பொருளும் தூக்கலாக இருக்காது. சுவைகளுக்கிடையில் சமநிலை பராமரிக்கப் படும். அந்த வகையில் சுவையான இறால் கறி தயாரிக்கும் செய்முறையை அளிக்கிறார், செப் ராஜ்மோகன்.

தேவையான பொருட்கள் :
இறால் : 600 கிராம்
தயிர் : 250 கிராம்
மிளகாய் பொடி : 5 கிராம்
வெங்காயம் : 200 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது : 300 கிராம்
வெந்தயம் : 2 கிராம்
வெந்தய இலை : 5 கிராம்
மஞ்சள் தூள் : 5 கிராம்
கரம் மசாலா : 5 கிராம்
கொத்தமல்லி : சிறிதளவு
வெண்ணெய்: 100 கிராம்
இஞ்சி : 10 கிராம் (துருவலாக நறுக்கியது)
நெய், உப்பு, எண்ணெய் : தேவைக்கேற்ப

செய்முறை:
* இறாலை நன்றாக அலசி சுத்தம் செய்துகொள்ளவும். குறிப்பாக இறாலின் மீது கருப்பு நிறத்தில் இருப்பவற்றை நீக்கி சுத்தம் செய்யவும்.
* வாணலியை சூடுபடுத்தி, வெண்ணெயை இட்டு, அதில் இறாலை இரண்டு நிமிடங்கள் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
* மற்றொரு வாணலியில் வெந்தயம், இஞ்சி--பூண்டு விழுது சேர்த்து, மணம் மாறும் வரை எண்ணெயில் வதக்கவும். பின், துண்டுகளாக்கப்பட்ட வெங்காயத்தை சேர்க்கவும். அத்துடன் மிளகாய் பொடி, மஞ்சள் தூள், வெந்தய இலை மற்றும் கரம் மசாலா சேர்த்து, சில நிமிடங்கள் வதக்கவும்.
* மசாலா நன்கு நிறம் மாறி வந்ததும், இறாலைச் சேர்க்கவும். பின், தயிர் சேர்த்து நன்கு கிளறிவிடவும். பின், சிறிதளவு நெய், கொத்தமல்லி இலை மற்றும் நறுக்கிய இஞ்சி சேர்த்து, சில நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். சுவையான இறால் கறி தயார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement