Advertisement

கண்கவர் கார்கள்!

எரிபொருள் சிக்கனம், கூடுதல் வேகம், சிறந்த விற்பனை என பல்வேறு அம்சங்களில் சிறந்த கார்கள்

ஹூண்டாய் வெர்னா
ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த வெர்னா கார், இந்தாண்டு கார் விற்பனையில் முக்கிய இடத்தை பெற்றது. இதன் விலை ரூ. 8 லட்சம். 1580 சி.சி., ஆறு கியர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

இடால்டிசைன் பாப் அப்
பறக்கும் வகை கார்களில் புதுமையானது இடால்டிசைன் பாப் அப் கார். இதன் விற்பனை தேதி, எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பி.எம்.டபுள்யு. - கான்செப்ட் 8
ஸ்போர்ட்ஸ் காரின் அதிகபட்ச திறன்களுடன் வந்துள்ளது பி.எம்.டபிள்யு.,வின் கான்செப்ட் 8. உட்புற நவீன கட்டமைப்பு, டிஜிட்டல் மயம் என பல வசதிகள் இந்த காரில் உள்ளன. விரைவில் சந்தைக்கு வருகிறது.

மின்சார... 'கார்'
விலை மற்றும் சார்ஜ் அளவு என 2 தேவைகளையும் நிவர்த்தி செய்யும் விதமாக 'டெல்சா மாடல் 3' எலக்ட்ரிக் கார் அறிமுகமானது. இதன் விலை ரூ. 22 லட்சம். ஒரே சார்ஜில் 321 கி.மீ., துாரம் செல்லலாம்.

டெர்ஸோ மில்லெனியோ
லம்போர்கினி நிறுவனத்தின் டெர்ஸோ கார், கார்பன் இழையால் ஆன பாகங்கள், அதிவேகம் தரும் சக்கர அமைப்பு, சிராய்ப்பு, கீறல்களை தனாக சரிசெய்யும் சிறப்பு என அடுத்த தலைமுறைக்கான பல நவீன வசதிகளை உள்ளடக்கியது. 2018ல் சந்தைக்கு வருகிறது.

மாருதி சுசுகி இக்னிஸ்
இந்த கார் 2017ன் துவக்கத்தில் சந்தைக்கு வந்தது. இதன் விலை ரூ. 4.50 லட்சம். 1250 சி.சி., ஐந்து கியர் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை கொண்டது. இந்தாண்டு விற்பனையில் முன்னணி இடத்தை பிடித்தது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement