Advertisement

வீ டூ லவ் சிறுவர்மலர்!

'வீ டூ லவ்' என்பது, வயதில் மூத்தோர் என்ற பொருளில் சொல்வதல்ல; 'சிறுவர்மலர்' குடும்பத்தில், மூத்தவர்களும் ஒரு அங்கம் என்பது தான் பொருள்.
'கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு' என்பர். கற்ற, கைமண் அளவை நினைவு படுத்துவதுடன், கல்லாத உலக அளவையும் தருகிறது சிறுவர்மலர் இதழ்.
அறிவு, அனுபவம் ஒருபக்கம் இருக்கட்டும்; நீதிக்கதைகள், சித்திரக் கதைகளை படிக்கும் போது, குழந்தையாகி விடுகிறோம்.
குட்டி குட்டி மலர்களில், அன்றும், இன்றும் குழந்தைகளை காணும் போது, கண்ணில் நெகிழ்ச்சி ஏற்படுகிறதே... அதுதான், பந்தமா... மொக்க ஜோக்ஸ், போட்டிகள், உங்கள் பக்கம் போன்ற பகுதிகளில், 'ஓடி விளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா...' என்று, நம் கவிஞர் பாரதியார் கூற்றுப்படி செயல்படும், சிறுவர்களின் படைப்பு ஆர்வம் உள்ளத்தை சிலிர்க்க வைக்கிறது.
தமிழகம் முதல், உலகம் வரை... அறிவியல், வரலாறு, மருத்துவம், இதிகாசம், மகான்கள் மற்றும் இயற்கை பற்றி அறிந்திராத தகவல்களை வழங்குவது, வரப்பிரசாதம்.
குட்டீஸ் கார்னர் போன்று, சிறு சிறு துணுக்குகளில் தான் எத்தனை தகவல்கள். பெயரில் தான், சிறுவர்மலர் இணைப்பு இதழ்; ஆனால், வயது பேதமின்றி, அனைவரும் கொண்டாடும் பிணைப்பு இதழ்!
- எஸ்.திருமலை, கோவை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement