Advertisement

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது 64; சிறுவயது முதல், படக்கதைகள், மர்மக்கதைகள், மாயாஜாலக் கதைகள் படிப்பதில் ஆர்வம் அதிகம். தங்க விநாயகர் என்னும், என் முதல் சிறுகதை, 1964ல் பிரசுரமானது. அம்புலி மாமா, கண்ணன் இதழ்களுக்குப்பின், சிறுவர்மலர் இதழை, தொடர்ந்து படித்து வரும் ரசிகன்.
வங்கி மேலாளராக இருந்த போதும், சிறுவர்மலர் இதழை படிக்க தவறியதில்லை; வெட்கப்பட்டதும் இல்லை. அதை படிக்கும்போது நானும் சிறுவனாக மாறிவிடுகிறேன். அதனால் தான் நானும், குழந்தை எழுத்தாளனாக விளங்க முடிகிறது. என் குழந்தைகளும் சிறுவர்மலர் இதழில் எழுதியுள்ளனர்.
முதலில் அட்டைப்படம் தான் பார்ப்பேன். அதன் பின் படக்கதை, குட்டீஸ் படங்கள், மாயாஜால அறிவுரைக் கதைகள், அறிவியல் செய்திகள் மற்றும் போட்டிகள் என படித்து, குழந்தைகள் பார்வைக்கு அனுப்பி வைப்பேன். இதழை பற்றி அவர்கள் விமர்சனத்தையும் கேட்டு ரசிப்பேன்.
குட்டி குட்டி மலர்கள் பகுதிக்கு, பிறர் வீட்டுக் குழந்தைகளின் படத்தையும் வாங்கி அனுப்பியுள்ளேன்; என் மனைவி, 'பெரிய பத்திரிகைகளே, விரசமாக எழுத ஆரம்பிச்சிடுச்சு... ஆனால், சிறுவர்மலர் மட்டும் மாறாமல், அப்படியே இருக்கு. சிறுவர்களுக்கு ஏற்ற பத்திரிகை...' என்று கூறுவாள்.
- ரா.ரங்கசாமி, தேனி.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement