Advertisement

பீட் ரூட் முந்திரி அல்வா!

தேவையான பொருட்கள்:
புதிய பீட்ரூட் - 200 கிராம்
சர்க்கரை - 150 கிராம்
திக்கான பால் -100 மி.லி.,
முந்திரி - 10
ஏலக்காய் - 4
நெய் - 100 கிராம்.

செய்முறை: கடாயில், ஒரு மேஜைக்கரண்டி நெய்விட்டு, பீட்ரூட்டை துருவி போட்டு, அதன் பச்சை வாசனை போக வதக்கவும். அதிலேயே, பாலை ஊற்றி, பீட்ரூட்டை, ஐந்து நிமிடம் வேக விடவும். பின்,ஆற வைத்து, அத்துடன், முந்திரி, ஏலக்காயை சேர்த்து, அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
மறுபடியும் கடாயில் ஒரு டம்ளர் நீர் விட்டு, குமிழி குமிழியாக கொதிக்கும் போது சர்க்கரையை போட்டு, இளம் பாகாகக் கொதித்து வரும் போது, அரைத்து வைத்துள்ள பீட்ரூட் துருவலையும் சேர்த்து, சர்க்கரைப் பாகில் வேக விடவும். அல்வா பதம்வரும் போது, மீதியுள்ள நெய்யை விட்டு, பீட்ரூட்டிற்கு மேலாக கசிந்து வரும் போது இறக்கவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
- ர.சுமதி, கோவை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement