Advertisement

அதிமேதாவி அங்குராசு!

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

முழங்காலிலும் - வயலினிலும் சிலந்தி!
பொதுப்பயன்பாட்டுக்கு வரக்கூடிய அதிநவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் உபகரணங்களை, லண்டனில் உள்ள, 'ராயல் சொசைட்டி' அறிமுகப்படுத்தி வருகிறது. அவற்றில் ஒன்றாக, செயற்கை சிலந்தி இழையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பான ஆய்வில் ஈடுப்பட்டு வரும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் உயிரியல் நிபுணர், பெத் மார்டிமர் கூறுகையில், 'சிலந்தி இழை, 300 மில்லியன் ஆண்டுகளாக உள்ளது. பொதுவாக, இரையைப் பிடிக்க உருவாக்கப்படும் சிலந்தி வலை, ஒரு வித புரதத்தை கொண்டு உருவாக்கப் படுகிறது. ஆனால், அந்த இழையின் மூலக்கூறு அமைப்பை அறிய, ஆய்வுகள் உதவி வருகின்றன. மேலும், மனிதப் பயன்பாட்டுக்கு, பல்வேறு விதங்களில், எவ்வாறு உதவும் என்றும் ஆராயப்பட்டு வருகிறது.
'இயற்கையில் உள்ள சில பொருட்களுக்கு, சிலந்தி இழைகளுக்கு உள்ளதைப் போன்று, ஆற்றலைக் கிரகிக்கும் திறன் உள்ளது. அதை, மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின்களுடன் சேர்த்தால், அதிக தாங்கும் திறன் கொண்ட இழைகளாக மாறும்...' என்கிறார்.
சிந்தெட்டிக் பாலிமர்களை காட்டிலும், இச்செயற்கைச் சிலந்தி இழை, ஆயிரம் மடங்கு அதிக வலு கொண்டது. ஆனால், தற்போது, பொருளாதார ரீதியாக, அதைச் சாத்தியமாக்குவது என்பது சவாலாக உள்ளது...' என, மார்டிமெர் கூறுகிறார். சிலந்தி வலையைச் சூழ்ந்துள்ள சிறிய பசைத் துளிகள், அதை ஒட்டும் தன்மை கொண்டதாக மாற்றுகிறது. தன் நீளத்தை விட, அதிக அளவு இழுக்கும் தன்மையும், அந்த பசை வழங்குகிறது. சிலந்தி இழையின், இது்போன்ற தன்மைகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தொழில்நுட்பங்களை உருவாக்க, விஞ்ஞானிகளுக்கு ஊக்கமளிக்கின்றன.
முழங்கால் குருத்தெலும்பை மீண்டும் வளரச் செய்வதற்கு, இந்த செயற்கை சிலந்தி இழையைப் பயன்படுத்துவது குறித்தும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த, செயற்கை சிலந்தி இழையால், இசைக்கலைஞர்களும் பயன்பெறுவர்...
ஆம்! வயலின் கம்பிகளுக்குப் பதிலாக, இந்த இழையைப் பயன்படுத்தலாம்.

வரமா... சாபமா!
அமெரிக்க அருகே உள்ள, அட்லாண்டிக் கடலுக்குள், அரிய கனிமங்கள் நிறைந்த, பாறைப் படிமங்களை, இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 'பூமியிலேயே அதிகபட்ச, அரிய கனிமங்களின் குவியல் இது...' என்று கூறப்படுகிறது. அட்லாண்டிக் கடலின் ஆழத்தில் இருக்கும் மிகப்பெரிய மலையில், இவை இருக்கின்றன. இயற்கையின், மிகப்பெரிய பொக்கிஷமாகக் கருதப்படும், இந்தப் படிமங்களில் இருக்கும் அரிய கனிமங்கள், மின்னணுத் தொழில் முதல், சூரிய மின்சாரத் தகடுகள் வரை பயன்படக் கூடியவை.
இவை, பெரும் மலையாகக் குவிந்திருப்பது, விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், இவற்றை வெட்டி எடுக்கும் போது, ஏற்படக் கூடிய, சுற்றுச்சூழல் பாதிப்பும், கடல்வாழ் உயிரிகள் ,பெருமளவு உயிரிழக்க நேரும் ஆபத்தும், இயற்கை ஆர்வலர்களுக்கு கவலையை ஏற்படுத்துகின்றன.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு!

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement