Advertisement

ஆட்டுப்பால், மாட்டுப்பால்...

நான், சைதை கார்ப்பரேஷன் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவம்!
தமிழ் ஆசிரியர் இலக்கண பாடம் நடத்திய போது, ஒரு மாணவனை நோக்கி, 'பால் எத்தனை வகைப்படும் அவை, யாவை...' என வினவினார். அவனும், 'பால் ஐந்து வகைப்படும் .அவை, ஆண்பால், பெண்பால், ஆட்டுப்பால், மாட்டுப்பால், அம்மாபால்...' என பதில் கூறினான்.
வகுப்பே, 'கொல்' என நகைத்தது. இதில், உச்சகட்டம் என்னவென்றால், அவன் பெயர் கோபால்; இந்நிகழ்ச்சிக்குப் பின், அவனை, 'அம்மாபால்...' என்றே அழைக்க ஆரம்பித்தோம்.
- ஏ.இளங்கோவன், சென்னை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement