Advertisement

குருபார்வை

# தனியாக Consumer Psychology என்ற படிப்பு உள்ளதா? அதை படிக்க விரும்புகிறேன்.
- பாலகிருஷ்ணன், கோவை.
Consumer Psychology என்பது மேனேஜ்மென்ட், பொருளாதாரம், மார்க்கெட்டிங் போன்ற படிப்புகளில் ஒரு பாடமாகப் படிக்கலாம். ஆனால் தனியாக இது ஒரு படிப்பாக தரப்படவில்லை. எனவே அதற்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம்.

# தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் 6,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறேன். பி.எஸ்சி., முடித்துள்ளேன். 28 வயதாகிறது. இனி அரசாங்க வேலை கிடைக்குமா.
- நித்யா, உசிலம்பட்டி.

சமீபகாலமாக அரசு வேலைக்கு செல்ல விரும்புவர்கள் மற்றும் அதற்காக முழுமூச்சுடன் தயார் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு வேலைக்கு, தற்போது பொதுவாக போட்டித் தேர்வு மூலம் தான் தேர்வு செய்யப்படுகின்றனர். உங்கள் வயதுக்கு நீங்கள் சில வங்கித் தேர்வுகளையும், பொதுவாக டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கும் உங்களது தகுதி மற்றும் வயதுக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும். இந்தத் தேர்வுகளை எழுதி நீங்கள் வேலைக்கு
செல்வது உங்களது கையில் தான் உள்ளது. எனவே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு மறக்காமல் விண்ணப்பியுங்கள். தொடர்ந்து விடாமுயற்சியுடன் படித்தால் உங்களுக்கு வேலை நிச்சயம் கிடைக்கும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement