Advertisement

வேதியியல் படித்தவர்களுக்கு வாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வேதியியல் துறை படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.

காலியிட விபரம் : மருந்துப் பரிசோதனைக் கூடங்களில் இருக்கும் ஜூனியர் அனலிஸ்ட் பிரிவில் 14ம், இண்டஸ்ட்ரீஸ் அண்டு காமர்ஸ் டிபார்ட்மென்டில் ஜூனியர் கெமிஸ்ட் பிரிவில் 6ம், இதே துறையில் கெமிஸ்ட் பிரிவில் 4ம், ஆர்க்கியாலஜிக்கல் கெமிஸ்ட் பிரிவில் 1ம் என 24 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது : 2017 ஜூலை 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : ஜூனியர் அனலிஸ்ட் பிரிவுக்கு பார்மசியில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் மருந்துகளை பரிசோதிக்கும் பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் தேவைப்படும். வேதியியல் பட்டப்படிப்பு, பார்மசூடிக்கல் கெமிஸ்ட்ரி படிப்பு இவற்றுடன் குறைந்தபட்சம் 2 வருட அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஜுனியர் கெமிஸ்ட் பிரிவுக்கு பி.எஸ்சி., (வேதியியல்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்க்கியாலஜிக்கல் கெமிஸ்ட் மற்றும் கெமிஸ்ட் பதவிக்கு வேதியியலில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை : பொது எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மையங்கள் : சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவையில் எழுத்துத் தேர்வு
நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் 200 ரூபாய்.

கடைசி நாள் : 2017 டிச., 20.

விபரங்களுக்கு : www.tnpsc.gov.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement