Advertisement

கால்நடை தீவன நிறுவனத்தில் பணி


கேரள மாநிலத்தில் 1999ல் கேரளா பீட்ஸ் லிமிடெட் என்ற கால்நடைகளுக்கான தீவன உற்பத்தி நிறுவனம் நிறுவப்பட்டது. கால்நடைகளுக்கான தீவனங்களை உற்பத்தி செய்வது இதன் பணி. இங்கு 25 மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரிவுகள் : கேரளா பீட்ஸ் நிறுவனத்தின் மேனேஜ்மென்ட் டிரெய்னி காலியிடங்கள் மார்க்கெட்டிங், மெட்டீரியல்ஸ், பினான்ஸ், எச்.ஆர்., ஆகிய பிரிவுகள் நிரப்பப்பட உள்ளன.

தகுதி : மார்க்கெட்டிங் பிரிவுக்கு 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்.பி.ஏ., மார்க்கெட்டிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதே போல் மெட்டீரியல்ஸ் பிரிவுக்கு எம்.பி.ஏ., மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் படிப்பும், பினான்ஸ் பிரிவுக்கு எம்.பி.ஏ., - பினான்ஸ் அல்லது சி.ஏ., அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ., படிப்பும், எச்.ஆர்., பிரிவுக்கு எம்.பி.ஏ., - கே.ஆர்., /பி.எம்.,/ஐ.ஆர்., அல்லது இதற்கு நிகரான முதுநிலை பட்டப் படிப்பும் தேவைப்படும்.

உதவித்தொகை எவ்வளவு : இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் ஆண்டில் ரூ.16 ஆயிரமும், இரண்டாவது ஆண்டில் ரூ.17,500ம் ஸ்டைபண்டாகப் பெறலாம்.\

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை :
பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
P.B.No.:436, Thycaud P.O., Thiruvananthapuram - 695 014.

கடைசி நாள் : 2017 டிச., 8.
விபரங்களுக்கு: www.keralafeeds.com/careers/careers

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement