Advertisement

பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பதவி


சென்ட்ரல் இன்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி போர்ஸ் எனப்படும் சி.ஐ.எஸ்.எப்., படை தற்போது நாடு முழுவதும் அறியப்படும் காவல்படைகளில் ஒன்று. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாப்புக்காகவே முதலில் நிறுவப்பட்டது. பின் இதன் சேவை விரிவுபடுத்தப்பட்டது. தற்போது பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட கேந்திரமான இடங்களின் பாதுகாப்பை இப்படையினரே உறுதி செய்கின்றனர். இங்கு கான்ஸ்டபிள் பிரிவில் காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது :
சி.ஐ.எஸ்.எப்., படையின் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 - 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : உடல்தகுதி தேர்வு, டாகுமென்டேஷன் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணம் 100 ரூபாய்.

கடைசி நாள்
: 2018 ஜன., 1.
விபரங்களுக்கு : www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_7_1718b.pdf

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement