Advertisement

இன்ஜினியர்களுக்கு அப்ரென்டிஸ் வாய்ப்பு

மத்திய அரசின் பயிற்சியுடன் கூடிய படிப்பை ஊக்குவிக்கும் விதமாக 'போர்டு ஆப் அப்ரென்டிஸ்ஷிப் டிரெய்னிங்' தென் மண்டல அமைப்பு சென்னையில் நிறுவப்பட்டது. இது மாணவர்களுக்கு ஸ்டைபண்டுடன் கூடிய பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்த அமைப்பின் மூலமாக கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவில் 325 இடங்களும், டிப்ளமோ டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவில் 175 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

காலியிட விபரம் :
கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவில் சிவிலில் 300ம், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் 15ம், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்கில் 10ம் காலியிடங்கள் உள்ளன. டிப்ளமோ டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவிலான சிவிலில் 150ம், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் 15ம், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்கில் 10ம் காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி : கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

பயிற்சிக் காலம் : ஒரு வருட காலத்திற்கு அப்ரென்டிஸ் பயிற்சி இருக்கும்.

தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு, மதிப்பெண் அடிப்படையில் தகுதி நிர்ணயம் போன்ற முறைகளில் இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் :
2017 டிச., 11.

விபரங்களுக்கு : www.boatsr-apprentice.tn.nic.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement