Advertisement

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் 'யெப்ஸோன் ஒன்' அண்டு 'யெப்ஸோன் பிரீடம்'

பாதுகாப்பு கேட்ஜெட்களை தயாரிக்கும் பின்லாந்து நாட்டு நிறுவனமான, யெப்ஸோன் தயாரித்து வெளியிட்டிருக்கும் ஜி.பி.எஸ்., டிராக்கர்கள் தான், 'யெப்ஸோன் ஒன்' மற்றும் 'யெப்ஸோன் பிரீடம்' கேட்ஜெட்கள். நமது கார், செல்லப் பிராணிகள், ஏன் குழந்தைகளின் இருப்பிடத்தை கூட, இந்த சிறிய டிராக்கர்களின் உதவியால் அறிந்துகொள்ள முடியும். பெண்கள் கூட ஹேண்ட்பேக்கில் போட்டுக்கொண்டால், ஆபத்து காலத்தில் இருப்பிடத்தை அறியவும், உதவிகோரி செய்தி அனுப்பவும் முடியும். இந்த டிராக்கர், எந்த பொருளின் இருப்பிடத்தையும், 6 விநாடிக்குள், மூன்று மீட்டர் துல்லியத்துடன் ஸ்மார்ட்போனுக்கு அடையாளம் காட்டிவிடும். கீ செயின் வடிவ யெப்ஸோன் பிரீடமில் எச்சரிக்கை ஒலி எழுப்பும் எஸ்.ஓ.எஸ்., பட்டன் உண்டு. பிளெயினாக இருக்கும் யெப்ஸோன் ஒன்னில் பட்டன்கள் கிடையாது

விலை: ரூ.3,999 / 5,999/-*

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement