Advertisement

மொபைல் கார்னர்: அசத்தலான ஹானர் வி10

தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஹூவெய், நேர்த்தியான, 'ஹானர்' வரிசை ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதுவரை வந்திருக்கும் மாடல்களே மற்ற பிராண்டுகளுக்கு கடும் போட்டியாக இருக்கும் நிலையில், எல்லா சிறப்பம்சங்களும் கொண்ட 'ஹானர் V10' மாடலை, டிசம்பர் 5ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற, 'மேட் 10' 'மேட் 10 புரோ' பேப்லெட்களின் சிறப்பம்சங்களுடன், கிரின் 970 சிப் செட், 6 ஜி.பி., ரேம் இருப்பது இந்த மாடலின் சிறப்பு. இது தரத்திலும் விலையிலும், ஆப்பிள், பிக்சல், ஒன்பிளஸ் போன்ற ஹை எண்ட் மாடல்களுக்கு நிச்சயம் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஜனவரி மாதம் முதல், ஹானர் V10 இந்தியாவில் கிடைக்கும்.

திரை அளவு : 5.99 அங்குலம் (எச்.டி.,)
ரெசல்யூஷன் : 2160 x 1080 பிக்சல்
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு ஓரியோ
புராசஸர் : ஆக்டோகோர் 'கிரின் 970'
ரேம் : 4 ஜி.பி., மற்றும் 6 ஜி.பி.,
உள்ளீட்டு சேமிப்பு : 32 / 64 / 128 ஜி.பி.,
மைக்ரோ எஸ்.டி., கார்டு : 256 ஜி.பி.,
பின்புற கேமரா : டியூயல் கேமரா
(16 எம்.பி + 20 எம்.பி)
செல்பி கேமரா : 13 எம்.பி.,
3ஜி / 4ஜி / எல்.டி.இ., : உண்டு
சிம் கார்டு : டியூயல் (ஹைபிரிட்)
பேட்டரி திறன் : 3750 mAh.,
எடை : 172 கிராம்

விலை:
ரூ.26,400 ரூ.29,300 ரூ.34,200
(32 GB) (64 GB) (128 GB)

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement