Advertisement

சிறுதானிய சமையல்: கேழ்வரகு இட்லி

ஆவியில் வேகவைக்கும் உணவுகள் பாதுகாப்பானவை. இவை ஜீரணத்தை எளிதாக்குவதுடன், கொழுப்பையும் கரைக்கும். அதிலும் கால்சியம் சத்தும், நோயெதிர்ப்பு தன்மையும் நிறைந்த கேழ்வரகில், இட்லி செய்தால், சுவையும் நன்மையும் இரட்டிப்பாகும். குறிப்பாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உகந்தது, கேழ்வரகு இட்லி.

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு : 200 கிராம்
அரிசி : 200 கிராம்
உளுந்து : 400 கிராம்

செய்முறை:
# கேழ்வரகு, இட்லி அரிசி இரண்டையும் எட்டு மணிநேரம் ஊற வைக்கவும். அதுபோல, உளுந்தையும் ஒரு பாத்திரத்தில் ஊற வைக்கவும்.
# தண்ணீர் தெளித்து, உளுந்துடன் இட்லி அரிசி மற்றும் கேழ்வரகை அரைக்கவும்.
# பிறகு நான்கு மணிநேரம் புளிக்க வைக்கவும். உப்பு சேர்த்து இட்லி தட்டில் அவித்து எடுத்தால், கேழ்வரகு இட்லி தயார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement