Advertisement

செப் ஸ்பெஷல் : ஷாமி கெபாப்

கெபாப் என்றாலே அசைவ பிரியர்களுக்கு நாவூறத் தொடங்கிவிடும். அதிலும், முகலாய ஸ்டைல் ஷாமி கெபாப் என்றால், அது சுவையின் உச்சம். இத்தகைய ஷாமி கபாப் ரெசிப்பியை வழங்குகிறார், செப் சதீஷ்குமார்.

தேவையான பொருட்கள்:

துண்டுகளாக்கப்பட்ட
ஆட்டிறைச்சி : 1/2 கிலோ
கடலை பருப்பு : 1கப்
சீரகத்தூள் : 1 டீஸ்பூன்
வெங்காயம் : 1 (வெட்டப்பட்டது)
இஞ்சி பூண்டு விழுது : 1 டீஸ்பூன்
தயிர் : 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் : 6
கொத்தமல்லி : 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் : 4
லவங்கப்பட்டை : 1
மிளகு : 1 டீஸ்பூன்
முட்டை : 2
தண்ணீர் : 2 கப்
கொத்தமல்லி இலை : 1/2 கட்டு
புதினா இலை : 1/4 கட்டு
எண்ணெய், உப்பு : தேவையான அளவு

செய்முறை:
# கடலைப் பருப்பை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
# குக்கரில் இறைச்சி, கடலைப்பருப்பு, 1 கப் தண்ணீர் , இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் மற்றும் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து, 6 விசிலுக்கு கொதிக்கவிடவும்.
# கொத்தமல்லி, ஏலக்காய், சீரகம், லவங்கப்பட்டை ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அதையும் வெந்து கொண்டிருக்கும் இறைச்சியுடன் சேர்க்கவும். தண்ணீர் வற்றும்வரை வேகவைக்க வேண்டியது முக்கியம்.
# பச்சை மிளகாய், வெங்காயம், மல்லி இலை, புதினா, தயிர், முட்டை ஆகியவற்றுடன், வேக வைக்கப்பட்ட இறைச்சியையும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
# மாவு பதத்திற்கு அரைத்து முடித்தவுடன், கைப்பிடியளவு எடுத்துக்கொண்டு, அதை தட்டையாக தட்டிக்கொள்ளவும்.
# பவுலில் அடித்து வைக்கப்பட்டிருக்கும் முட்டையில், அதை முக்கி தட்டையான வாணலியில் பிரை பண்ணவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றினால் போதுமானது.
# ஏற்கெனவே இறைச்சி வேக வைக்கப்பட்டுவிட்டது என்பதால், இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை பிரை செய்தால் போதுமானது.
# சுவையான, சூடான ஷாமி கபாப் தயார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement