Advertisement

ஐந்து நிமிட சமையல்: அசத்தல் 'கரண்டி ஆம்லெட்'

ஆம்லெட்டை பல வெரைட்டிகளில் தயார் செய்யலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை தரும் அதிலொன்று, மதுரை ஸ்பெஷல் கரண்டி ஆம்லெட். இதோ அதற்கான ரெசிப்பி.

தேவையான பொருட்கள்:


முட்டை : 4
வெங்காயம் : 1
பச்சை மிளகாய் : 2
மிளகுத்தூள், உப்பு : தேவையான அளவு

செய்முறை:
# முட்டையை அடித்து கிண்ணத்தில் ஊற்றி, அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்.
# பெரிய குழிகரண்டியில் லேசாக எண்ணெய் தடவிக்கொள்ளவும். அதில் சிறிதளவு முட்டை கலவையை ஊற்றுங்கள். கரண்டியை அப்படியே மிதமான தீயில் வையுங்கள்.
# சிறிது நேரத்தில் ஆம்லெட்டை திருப்பிப் போட்டு வெந்ததும் எடுங்கள். அசத்தலான கரண்டி ஆம்லெட் ரெடி. குழி கரண்டிக்கு பதில் பணியார சட்டியிலும் செய்யலாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement