Advertisement

நாங்க இப்படிதானுங்க! 'டான்ஸ்' மாதிரி வராது!

சர்வதேச பாட்மின்டன் போட்டிகளில் விளையாடிய, இந்திய ஆட்டக்காரர், பிரகாஷ் படுகோனேவின் மகள் என்பதால், சிறு வயதிலிருந்தே, தீபிகாவும் பாட்மின்டன் பயிற்சி செய்கிறார்.
குறிப்பிட்ட வயதிற்கு பின், விளையாட்டில் இருந்து, 'மாடலிங்'கில் ஆர்வம் வந்தது. ஆனால், இன்றும், தினமும் காலை, 5:00 மணி முதல், 7:00 மணி வரை, பாட்மின்டன் பயிற்சி செய்ய
தவறுவதில்லை. எத்தனை உடற்பயிற்சி, விளையாட்டு இருந்தாலும், 'பிட்'டாக தன்னை உணர வைப்பது, 'டான்ஸ்' பயிற்சி தான் என்பது, தீபிகாவின் நம்பிக்கை. காலை உணவாக, இரண்டு வேக வைத்த முட்டை, கொழுப்பு நீக்கிய பால் ஒரு டம்ளர், இத்துடன் இட்லி, தோசை, உப்புமா என, ஏதாவது ஒரு தென்னிந்திய உணவு... மதியம், இரண்டு சப்பாத்திகள், வேக வைத்த மீன், காய்கறிகள்; மாலையில் உலர்ந்த நட்ஸ், பில்டர் காபி; இரவு, சப்பாத்தி, பச்சைக் காய்கறி, பழங்கள் சாப்பிடுவது தான், தீபிகாவின், 'டயட்!' இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, திராட்சை, மாம்பழம் அல்லது பிரஷ் ஜூஸ், இளநீர் குடிப்பார்.வழக்கமான விளையாட்டு பயிற்சிக்கு பின், யோகாவும், அரை மணி நேரம் நடைப்பயிற்சியும் செய்கிறார்.

- தீபிகா படுகோனே, மாடல், பாலிவுட் நடிகை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement