Advertisement

அவல் பக்கோடா!

தேவையானவை:
அவல் - 0.5 கப், கடலை மாவு - 1 கப், சோள மாவு - சிறிதளவு, காரப்பொடி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, சமையல் எண்ணெய், வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது.

செய்முறை:
முதலில், அவலை நன்கு களைந்து, தண்ணீரில், ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். அதிகப்படியாக உள்ள தண்ணீரை, மாவு சல்லடையில் வடிகட்டவும்.
வடிந்தவுடன், ஊறிய அவலுடன், சோளப்பொடி, காரப்பொடி, உப்பு, வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை கலந்து, வடித்து வைத்த தண்ணீரை, தேவையான அளவு விட்டு, பக்கோடா மாவு பதத்திற்கு பிசையவும்.
பின், வாணலியில், எண்ணெய் காய வைத்து, பிசைந்து வைத்துள்ள அவல்மாவை, சிறிது, சிறிதாக கிள்ளிப் போட்டு, மொறுமொறுப்பாக, பொரித்து எடுக்கவும். சுவையான அவல் பக்கோடா தயார். இது சத்தான, சுவையான மாலை நேர உணவு. குழந்தைகள் விரும்பி உண்பர்.
- எஸ்.லலிதா, சென்னை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement