Advertisement

காய்ச்சல் போக்கும் சுரை சட்னி!

தேவையான பொருட்கள்: சுரைக்காய் - 1, மிளகாய் - 4, தக்காளி - 3, பூண்டு - ஒரு பல், இஞ்சி - தேவையான அளவு, சீரகம் - 1 மேஜைகரண்டி, கடுகு - 1 மேஜைகரண்டி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சுரைக்காய், மிளகாய், தக்காளி, பூண்டு மற்றும் இஞ்சி அனைத்தையும் சிறிதாக வெட்டி, நன்கு அவிக்கவும். சீரகம், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதன் பின், இவை அனைத்தையும் கொரகொரப்பாக அரைக்கவும். இதில், சுட வைத்த தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்தால், சுரை சட்னி தயார். காய்ச்சல் மற்றும் உடல் இளைக்க செய்யும் குணம் இந்த சட்னிக்கு உண்டு!
- கு.மீனா, ராஜபாளையம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement