Advertisement

பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட...

* வெடிக்காத பட்டாசுகளை கையால் தொடுவதோ, அதை ஒன்று சேர்த்து கொளுத்துவதோ அறவே கூடாது
* கையில் பட்டாசை பற்ற வைத்து துாக்கி எறிவதே தீ விபத்துக்கு முக்கிய காரணம். இதனால், நீங்கள் மட்டுமல்லாமல், உங்களை கடந்து செல்பவர்களும் பாதிக்கப்படுவர்
* அதிகம் புகை கக்கும் மத்தாப்புகளை கொளுத்தும் போது, அதிலிருந்து வெளிவரும் புகை, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும். அதனால், மூக்கை மூடி கொள்வது நல்லது
* புஸ்வானம், தரைசக்கரம், ராக்கெட் வெடிக்கும் போது, நீண்ட மத்தாப்பு வைத்து வெடிப்பது நல்லது
* வாணவேடிக்கை, காதைப்பிளக்கும் வாலாக்கள் போன்றவற்றை மக்கள் அதிகம் நடக்கும் இடங்களில் வெடிக்காமல் இருப்பது நல்லது
* பட்டாசு ஈரமாகிவிட்டால், அதை அடுப்படியில் வைத்து, உலர்த்த கூடாது
* பட்டாசு வெடிக்கும் போது, அருகில், பக்கெட்டில் தண்ணீர் வைத்திருப்பது நல்லது
* முடிந்த வரை, குழந்தைகளை, தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டாம்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement