Advertisement

'வீ டூ லவ்' சிறுவர்மலர்

கடந்த, 2006ல் அரசு அலுவலராக பணி செய்து, ஓய்வு பெற்றேன். சில மாதங்களில், என் மனைவி இறந்து விட்டாள். அப்போது, எனக்கு துணையாக இருந்தது, 'சிறுவர்மலர்' இதழ் தான்.
கதைகள், தொடர் கதைகள், ஜோக்ஸ் மற்றும் அதிமேதாவி அங்குராசு என, அனைத்தையுமே ஒரு வரி விடாமல் படிப்பேன். அதுமட்டுமல்ல, இவ்விதழில் வரும் கதைகளை, பேரன், பேத்திகளுக்கும், சொல்லி கொடுப்பேன்.
சிறிது நாட்களுக்கு முன், கண்ணில் சத்து குறைவு காரணமாக, கண்பார்வை பாதிக்கப்பட்டது. அச்சமயத்திலிருந்து, எட்டாம் வகுப்பு படிக்கும் என்னுடைய பேரன், 'சிறுவர்மலர்' இதழில் வரும் கதைகள் மற்றும் ஜோக்ஸ் பகுதிகளை வாசித்து காட்டுவான்; இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
மனைவியை இழந்த எனக்கும், என் குடும்பத்தார் அனைவருக்கும், சிறுவர்மலர் இதழ், உற்ற துணையாக இருக்கிறது. சிறுவர்மலர் இதழுக்கு என்னுடைய நன்றியை மனதார தெரிவித்து கொள்கிறேன்.
- பா.சுப்பையா, மதுரை

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement