Advertisement

என்ன மனுஷங்கடா நீங்க?

நான் ஆல்தியா ஜான்சன். ஆங்கிலோ இந்தியன். 'ஐடி' வேலை. மாசம் 80 ஆயிரம் சம்பளம். சிகரெட் புகைப்பேன். என் மகனோட தனியா இருக்குறேன்.ஒரு மழை நாள்ல பிரபுவை சந்திச்சேன். என்னைப் பார்த்த உடனேயே என் கூட படுக்கையை பகிர்ந்துக்க நினைக்கிற ஆண்கள் மத்தியில, அவன் மட்டும் தான் வாழ்க்கையை பகிர்ந்துக்க நினைச்சான். சேர்ந்து வாழ ஆரம்பிச்சோம். ஒருகட்டத்துல, அவனுக்குள்ளே இருந்த ஆம்பளை புத்தி கழுத்தை நீட்டுச்சு.'ஆல்தியா... உன் பாஸ் உன் போனுக்கு மெசேஜ் பண்ணியிருக்கான்!''என்னன்னு?''டெல்லி போயிட்டு அப்படியேரெண்டுநாள் குலுமணாலிபோயிட்டு வரலாமான்னு!''சரி''நீ அவன் கூட டெல்லிக்குப் போகாதே!''இங்க பாரு, இந்த வேலையில நான் 10 வருஷமா இருக்குறேன். அவனை எப்படி ஹேண்டில் பண்ணணும்னு எனக்குத் தெரியும். எனக்கு பாடிகார்ட் எல்லாம் தேவையில்லை. லவ் பண்ணா அதை மட்டும் பண்ணு!'இந்த வாக்குவாதம் சண்டையாகி நாங்க பிரிஞ்ச பின்னாடி, ஒருநாள் என் பாஸ்கிட்டே கேட்டேன்.'எனக்கு மட்டும் தான் இப்படி மெசேஜ் அனுப்புவீங்களா இல்ல ஆபிஸ்ல இருக்குற எல்லா பொண்ணுங்களுக்கும்...?''ஆல்தியா... நான் பொம்பள பொறுக்கி கிடையாது!''அப்புறம் ஏன் எனக்கு அப்படி மெசேஜ் அனுப்புனீங்க?''ஏன்னா, நீ தனியா இருக்கே, ஸ்டைலிஷா இருக்கே, சிகரெட் புகைக்கிறே, ஸ்கர்ட் போடுறே...'ஆக தனியா இருக்குற, சிகரெட் புகைக்கிற, ஸ்கர்ட் போடுற பொண்ணுங்ககிட்டே ஒரு ஆண் என்ன வேணும்னாலும் கேட்கலாம், சந்தேகப்படலாம். அப்படித்தானே?என்ன மனுஷங்கடா நீங்க?

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement