Advertisement

குருபார்வை

போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கு கட்டாயம் ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேர வேண்டுமா?
நாமாகவே படிப்பதில் வெற்றி கிடைக்காதா?
- அறிவானந்தம், செங்கல்பட்டு

போட்டித் தேர்வுகள் எழுதும் பெரும்பாலானவர்களுக்கு இது ஒரு அடிப்படை சந்தேகமாகவே உள்ளது. பல ஊர்களில் பயிற்சி மையங்கள் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் பல மையங்கள் பெரியளவில் வெற்றியைத் தருவதில்லை. எனவே பயிற்சி மையங்கள்
மட்டுமே வெற்றியை தரும் என நம்புவது ஆரோக்கியமான எண்ணமல்ல. எனினும் இன்று போட்டித் தேர்வுகளுக்கு இருக்கும் கடும் போட்டியை கணக்கில் கொண்டால் நீங்கள் பெறும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் உங்களை ஆயிரக்கணக்கானவர்களை விட முன்னெடுத்துச் செல்லும். இங்கு தான் பயிற்சி மையங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. புளூ பிரின்ட் எனப்படும் தெளிவான வரையறைகளை இவை அறிந்துள்ளன. அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள் உங்களது மதிப்பெண்களை தெளிவாக மேம்படுத்த உதவுகின்றன. குடும்ப சூழல், நிதி நிலைமை, பயிற்சி நிறுவனங்கள் உள்ள அருகாமை போன்றவற்றை கணக்கில் கொண்டு முடிவு எடுக்கலாம்.

தொலைதுார கல்வியில் பட்டப் படிப்பு முடித்துள்ள நான் எஸ்.எஸ்.சி., நடத்தும் சி.ஜி.எல்., தேர்வில் வெற்றி பெற முடியுமா?
- ராகவேந்திரன், நயினார்கோவில்
சி.ஜி.எல். தேர்வுக்கான தகுதி பட்டப் படிப்பு மட்டுமே. எனவே நீங்கள் தேர்வுக்கான தகுதியைப் பெற்றுள்ளீர்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஆனால் சி.ஜி.எல்., தேர்வுக்கான திட்டமிடலும் பயிற்சியும் உங்களது நிறை குறைகளின் அடிப்படையில் நீங்கள் அறிந்து கொண்டு அதற்கேற்ப தயாராவதில் தான் உங்களது வெற்றி அமைந்திடும். எனவே முதலில் பாட திட்டத்தை நன்கு அறிந்துகொண்டு அதற்கேற்ப உங்களது வியூகத்தை அமைத்துக் கொள்ளவும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement