Advertisement

இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வாய்ப்பு

இந்திய புள்ளியியல் நிறுவனம் மேற்குவங்கத்தின் கோல்கட்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் கிளை அலுவலகங்கள் டில்லி, பெங்களூரு, சென்னை, தேஜ்பூர், ஐதராபாத் மற்றும் ஜிரிதிக் ஆகிய இடங்களில் செயல்படுகின்றன. இந்நிறுவனத்தில் காலியாக உள்ள 48 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது.

காலியிட விபரம்:
துணை தலைமை நிர்வாகியில் 3, சீனியர் நிர்வாக அதிகாரியில் 1, நிர்வாக அதிகாரியில் 4, அக்கவுண்ட்ஸ் ஆபிசரில் 3, அலுவல உதவியாளரில் 16, சிவில் இன்ஜினியரில் 1, எலக்ட்ரீசியனில் 3, லிப்ட் ஆப்பரேட்டரில் 4, இதர பிரிவுகளில் 13 என மொத்தம் 48 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :
விண்ணப்பிக்கும் பிரிவை பொறுத்து கல்வித்தகுதி மாறுபடும். முழுமையான விபரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் 2017 செப்., 19 முதல் அக்., 17 வரை விண்ணப்பிக்கலாம். பின் இதனை பிரின்ட் செய்து, உரிய நகல் சான்றிதழ்களை இணைத்து நவ., 3ம் தேதிக்குள் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 300 ரூபாய். எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினர் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

முகவரி:
The Senior Administrative Officer,
Personnel Unit, Indian Statistical Institute,
203, B.T. Road, Kolkata-700108.
விபரங்களுக்கு : www.isical.ac.in/~isirecruit/

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement