Advertisement

தெரிஞ்சுக்கோங்க!

* நம்முடைய எலும்புகள் அனைத்தும்; மிக மிக மெல்லியதாக உள்ளன. ஆனால், அவை எலும்புக் கூடாகி நிற்கும் போது, இரும்பை விட, நான்கு மடங்கு உறுதியாகிவிடுகிறது; எடையும் அதிகரித்துவிடுகிறது. மெல்லிய எலும்புகளுக்குள் இவ்வளவு சக்தி மறைந்திருக்கிறது. இது மட்டுமல்ல, உடல் மொத்த எடையில், 20 சதவீதம் எலும்புகளின் எடை தான்.
* மழை அளவை, ஒரு அங்குலம்; இரண்டு அங்குலம் மழை பெய்தது என்று சொல்கிறோம். ஒரு அங்குலம் மழை என்பது, எவ்வளவு தெரியுமா... ஒரு ஏக்கர் நிலப்பரப்பில், 113 டன் எடையுள்ள நீரைக் கொட்டுவதற்கு சமமாகும்.
* பெரிய மீன் தான் சிறிய மீன்களை விழுங்கும். இது சாதாரண நிகழ்வு. ஆனால், ஆழ்கடலில், விரியன், கருவிழுங்கி போன்ற சிறிய மீன்கள் உள்ளன. இவ்வகை மீன்கள் தம்மை விட, பெரிய மீன்களை விழுங்கிவிடும்; அதற்கேற்ப அவற்றின் வயிறும் விரிவடையும்.
* மாதரன் என்றால், காடு நிறைந்த உயர்ந்த மலை என்று பொருள். இது, மும்பையிலிருந்து, 110 கி.மீ., தொலைவில் உள்ளது. காடுகளின் தலைவன் என்றும் சொல்லலாம். மலை உச்சியில், அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. இந்த அற்புதமான பகுதியை, 1870ல் ஹக்மாலட் என்ற ஆங்கிலேயர் கண்டறிந்தார்.
* காண்டாமிருகத்தின் கொம்பிலிருந்து தயாரிக்கப்பட்ட கோப்பைகளுக்கு, மருத்துவக் குணம் இருப்பதாக நம்பப்படுகிறது. சில காண்டாமிருகங்களின் கொம்பு, 1.5 மீ., நீளம் வரை இருக்கும்.
காண்டாமிருகம், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் குட்டி ஈனும்; கர்ப்ப காலம் ஒன்றரை ஆண்டுகள்; இதன் ஆயுள், 50 ஆண்டுகள்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement