Advertisement

மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!

டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.

பாகற்காய் பகோடா!
தேவையான பொருட்கள்:
கடலைமாவு - 1 கப், சோம்பு - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி, பாகற்காய் - இரண்டு, அரிசி களைந்த நீர் - 1 கப், உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
முதலில், பாகற்காயை வட்ட வட்டமாக வெட்டி, அரிசி களைந்த நீரில் போடவும். அரை மணி நேரத்திற்கு பின், பாகற்காயை சுத்தம் செய்து, ஒரு பாத்திரத்தில், தண்ணீர் இன்றி வைக்கவும்.
அதில், அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்தூள், சோம்பு, பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து, கெட்டியாக பிசையவும். பின், வாணலியில் எண்ணெய் ஊற்றி, பிசைந்த பாகற்காயை, பகோடவாக போடவும்.
அரிசி களைந்த நீரில் சுத்தம் செய்வதால், கசப்பு தெரியாது.
இது, வயிற்றில் உள்ள பூச்சிகளை கொல்லும்; குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
- அ.கவுசியா, நெய்வேலி.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement