Advertisement

பேரிக்காய்!

நன்றாக பழுத்த பேரிக்காய், இனிப்பு சுவையுடன் அல்லது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும். இது, ஆப்பிள் குடும்பத்தை சேர்ந்தது.
இதில், வைட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 இருக்கிறது. சுண்ணாம்பு சத்து இருப்பதால், எலும்புகளுக்கு உறுதி அளிக்கிறது; பற்களை பலப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, இதயம், இரைப்பை மற்றும் குடல் போன்றவற்றிற்கு பலத்தை உண்டாக்குகிறது.
இதயத்தில் ஏற்படும் படபடப்பு, உடலில் ஏற்படும் திடீர் வியர்வை நீங்க, அடிக்கடி பேரிக்காயை உண்டு வர நல்ல பயன் தரும்.
குழந்தைகளுக்கு, பேரிக்காயை கொடுத்து வந்தால், அவர்களின் எலும்புகள் நல்ல முறையில் வளர்வதுடன், உறுதியாகவும் இருக்கும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement