Advertisement

விசித்திர பழக்கம்!

இந்தோனேஷியாவில், பாலி தீவில் உள்ள, 'ட்ருயான்' என்ற கிராமத்தில், மரணமடைந்தவர் உடலை புதைப்பதோ, எரிப்பதோ இல்லை. மாறாக, நீரால் உடலை, சுத்தப்படுத்தி பிரார்த்தனை செய்வர். பின், இடுகாட்டுக்கு தூக்கி சென்று, 'தாருமின்யான்' என்ற மரத்துக்கு கீழ், பச்சை மூங்கில் கூடையில் வைத்து விட்டு, வீடு திரும்புவர். அங்கு காத்திருக்கும் நாய் கூட்டம் உடலை சாப்பிட துவங்கும்.
இது குறித்து இக்கிராமத்தினர், 'தாருமின்யான் மரங்கள் புனிதமானது; இதில் இருந்து வெளியேறும் பசை போன்ற கறை, உடல் அழுகும் போது உண்டாகும் துர்நாற்றத்தை அகற்றி விடும்...' என்கின்றனர். மேலும், ஆண்டிற்கு இரண்டு முறை, இடுகாட்டுக்கு வந்து, மரணமடைந்த தங்கள் உறவினருக்கு விருப்பமான மது, சிகரெட் மற்றும் பணம் போன்றவற்றை வைக்கின்றனர். இங்கு செல்ல பெண்களுக்கு அனுமதியில்லை.
ஜோல்னாபையன்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement