Advertisement

நாயுடன் சேர்ந்த நரி!

'நரி காட்டில் வாழ்வதால், அது, நாய்களை போல், மனிதர்களுடன் நட்புடன் இருக்காது...' என்று சொல்வதுண்டு. ஆனால், இது பொய் என்று நிரூபித்துள்ளது, நரி ஒன்று!
கேரள மாநிலம், திரிச்சூரில் நெல்சன் என்பவர் வீட்டில், 'லாப்ரடார்' இன நாய் ஒன்று இருக்கிறது. இவரது வீடு, காட்டுப் பகுதியை ஒட்டி இருப்பதால், நரி ஒன்று இவர் வீட்டு அருகில் குட்டி போட்டது. இதை பார்த்த நாய் குரைக்க, நரி, அதன் குட்டிகளை தூக்கிக் கொண்டு ஓட, ஒரு குட்டியை தவற விட்டு விட்டது.
நாய், அந்த நரிக்குட்டியை கவ்வி, வீட்டுக்குள் எடுத்துச் செல்ல, அதை நாயுடன் சேர்த்து வளர்த்து வந்தார், நெல்சன். அக்குட்டி நரி இன்று வளர்ந்து, பெரிதாகி, நாயை போலவே, பற்றும், பாசத்துடனும் நெல்சன் வீட்டில் வாழ்ந்து வருகிறது.
ஜோல்னாபையன்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்

    நரி காட்டு விலங்கு, வீட்டில் வளர்க்க முடியாது.தடை செய்யப்பட்டது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement