Advertisement

கவிதைச்சோலை!

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்!

திசைகள் எட்டும்
அரும்பாய் இருந்த
அன்னை பாரதம்
அனைத்து துறையிலும்
கரும்பாய் இனிப்பதை
களிக்கும் திருநாள்
இந்த திருநாள்!

எல்லா வளர்ச்சிக்கும்
இதயமாய் இருக்கிற
கல்வியில் தேசம்
கலங்கரை விளக்காக
காட்சி தரும் திருநாள்
இந்த திருநாள்!

ஏவுகணைகளை ஏவி களித்து
வான மண்டலத்தையே வியக்க வைத்த
அலாவுதீன் அற்புத விளக்காம்
அறிவியல் துறையில்
அதிசயம் நிகழ்த்தும் ஆற்றல் போற்றும்
ஆனந்த திருநாள்
இந்த திருநாள்!

குடும்ப விளக்காம்
பெண் விடுதலையை
பேச்சாய் இல்லாமல்
உயிர்மூச்சாய் உணர்ந்து போற்ற
உதவிய திருநாள்
இந்த திருநாள்!

அடிமை விலங்கை
ஒடித்து எறிந்து
சுடர் விளக்கை ஏற்றி
மகிழும் திருநாள்
இந்த திருநாள்!

இளைய தலைமுறையின்
இதய நாளங்களில்
ஒளி விளக்கை ஏற்றி
ஒருமைப்பாட்டை
விதைத்த திருநாள்
இந்த திருநாள்!

மத துவேஷங்களை
மனதில் நீக்கி
மனிதகுலம் ஓர் குலம் எனும்
பொய்யா விளக்கை
பொருந்திய திருநாள்
இந்த திருநாள்!

இப்படி
எட்டுத்திக்கிலும் இருளை நீக்கி
வெற்றி விளக்கை ஏற்றி
விடியல் காட்டும் திருநாள்
இந்த விடுதலை திருநாள்!

எட்டுத்திக்கும்
திரும்பிப் பார்க்கட்டும்
இனி -
இந்தியா அரும்பும் தேசமல்ல
உலகமே விரும்பும் தேசம் என்பதை!

வளர்கவி, கோவை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement