Advertisement

வீ டு லவ் சிறுவர் மலர்

நான் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்; வயது: 64. சிறுவர்மலர் இதழ், துவங்கிய நாள் முதல் படித்து வருகிறேன். என் மனைவி, கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்ததால், பிள்ளைகள் அதே பள்ளியில் படித்தனர். அங்கு, தமிழ் கிடையாது. குழந்தை களின் தமிழறிவு பாதிக்கப்படுமே என அச்சமுற்றேன்.
அப்போது, கலங்கரை விளக்கமாய் கை கொடுத்தது சிறுவர்மலர் தான். குழந்தைகளின் தமிழ் ஆசானான சிறுவர்மலர் இதழ், நாளடைவில் என்னையும் கவர்ந்தது. நானும், ஒவ்வொரு வெள்ளியன்று காலையிலேயே சிறுவர்மலர் இதழை எதிர்பார்த்து காத்திருக்க துவங்கினேன்.
தொலைக்காட்சியில் வரும், 'சீரியல்'களை தவிர்த்து, நல்லதொரு பொழுதுபோக்கு அம்சமாய், சிறுவர்மலர் இதழை ஆர்வத்தோடு படித்து வருகிறேன். எனவே, என் உள்ளம் எப்போதும் சொல்வது, 'வீ டூ லவ் சிறுவர்மலர்!'
- கு. கணேசன், மதுரை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement