Advertisement

மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!

டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.

வேப்பம் பூ துவையல்!
தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன், மிளகாய் வற்றல் - 4, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 5 பல், வேப்பம் பூ - 1 கப், பெருங்காயம் - சிறிதளவு, புளி - சிறிதளவு, கருவேப்பிலை - தேவையான அளவு, எண்ணெய், நெய் - தேவையான அளவு.
செய்முறை:
முதலில், வாணலியில் சிறிது நெய் ஊற்றி, வேப்பம் பூவை, சிவக்க வறுக்க வேண்டும். அதை தனியாக எடுத்து வைத்துவிட்டு, ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டு மற்றும் பெருங்காயம் போன்ற அனைத்து பொருட்களையும் வறுக்க வேண்டும்.
ஆறிய பின், இத்துடன் வேப்பம் பூவை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு துவையல் பதத்தில் அரைத்தால், 'வேப்பம் பூ' துவையல் தயார். இந்த துவையலை, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
இட்லி, தோசைக்கும் ருசியாக இருக்கும். இது உடலுக்கு மிகவும் நல்லது. வாரம் இரண்டு முறை, வேப்பம் பூ துவையலை சாப்பிட்டால், வயிற்றிலுள்ள பூச்சிகளை கொன்று விடும்.
- வ.சந்திரா மாணிக்கம், மதுரை

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement