Advertisement

ரத்த தானம்!

பெரும் செல்வந்தர் ஒருவர், கடும் நோய்வாய்ப்பட்டார். அவர் உயிர் பிழைக்க வேண்டுமென்றால், யாரேனும் ரத்தம் தர வேண்டும். அந்த ஊரில் இருந்த கருமி ஒருவனின் ரத்தம் தான் செல்வந்தருக்கு பொருந்தியது.
நிறையப் பணம் கிடைக்கும் என்ற எண்ணத்தில், ரத்தம் கொடுக்க முன் வந்தான் கருமி. உயிர் பிழைத்த செல்வந்தர், கருமிக்கு, ௧,000 ரூபாய் அன்பளிப்பாக கொடுத்தார். அதை சந்தோஷமாக வாங்கினான் கருமி.
அடுத்த மாதம், அந்த செல்வந்தருக்கு மீண்டும் ரத்தம் தேவைப்பட்டது. இம்முறையும், ரத்தம் கொடுத்தான் கருமி. அவனுக்கு, 500 ரூபாய் அன்பளிப்பாக கொடுத்தார். முணுமுணுத்தபடியே அந்த தொகையை பெற்றான் கருமி.
மூன்றாம் முறையும் செல்வந்தருக்கு ரத்தம் தேவைப்பட்டது. இம்முறை அதிக தொகை எதிர்பார்த்து ரத்தம் கொடுத்தான் கருமி. ஆனால், அவனுக்கு அன்பளிப்பாக ஒரு ரூபாய் கூட, செல்வந்தர் கொடுக்கவில்லை.
''என் உடலிலிருந்து விலை மதிப்பற்ற ரத்தத்தை தந்துள்ளேன். ஏன் இம்முறை எனக்கு பணம் ஏதும் தரவில்லை...'' என்று கோபத்துடன் கேட்டான் கருமி.
''முதல் முறை ரத்தம் தந்த போது, என் உடலில், என் ரத்தம் தான் இருந்தது. ஆதலால், 1,000 ரூபாய் தந்தேன். இரண்டாம் முறை ரத்தம் தந்த போது, என் உடம்பில் உன் ரத்தம் பாதி இருந்தது. ஆகவே, முதலில் கொடுத்ததில் பாதி தொகையை அன்பளிப்பாக தந்தேன்.
''மூன்றாம் முறை, ரத்தம் தந்த போது, என் உடலில் உன் ரத்தம் தான் இருந்தது. எனவே, உன்னுடைய கஞ்சபுத்தி முழுவதும் என்னை தொற்றியதால், பணம் கொடுக்க எனக்கு மனம் வரவில்லை,'' என்று விளக்கம் தந்தார் செல்வந்தர்.
விளக்கத்தை கேட்டு, நொந்து போனான் கருமி

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement