Advertisement

குருபார்வை

கல்லுாரியில் படித்துவரும் நான் ஏர்ஹோஸ்டஸ் ஆக விரும்புகிறேன். இதற்கு என்னென்ன மென்திறன்கள் தேவைப்படும்?
- எஸ். உமா, கோவை

இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் விமான சேவைகளின் தேவை தொடர்ந்து அதிகரிக்கிறது. விமான சேவை என்றவுடனே பலருக்கும் நினைவிற்கு வருவது விமானங்களில் நேரடியாக சேவைகளை தரும் ஏர்ஹோஸ்டஸ் தான்.
விமான சேவை என்பது சேவைப்பிரிவு சார்ந்த ஒன்று என்பதால் இச்சேவைகளின் முக்கிய முகமாக திகழ்பவர்களும் இவர்கள்தான். எனவே, ஏர்ஹோஸ்டஸ் என்ற பணிக்கு தனி நபரின் கம்யூனிகேஷன் திறன் மற்றும் நடை, உடை, பாவனை ஆகிய அனைத்துமே முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருக்கின்றன.
கம்யூனிகேஷன் என்பதில் குறிப்பாக வெர்பல் மற்றும் நான்-வெர்பல் எனப்படும் வாய்மொழி சார்ந்த மற்றும் சைகை மொழி சார்ந்த தகவல் பரிமாற்றத் திறன்களே ஏர்ஹோஸ்டஸ்களின் தனித்துவத்தை உணர்த்த முடியும்.
எனவே வாய்மொழி சார்ந்த தகவல் பரிமாற்றத்தை பொறுத்தவரை பேசுவதற்கு நாம் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள், உச்சரிக்கும் போது நமது குரலின் தன்மை, வார்த்தைகளை நாம் பேசுவதற்கான கால அளவு போன்றவற்றை நாம் நன்கு பழகிக் கொள்வது மற்றும் செயல்படுத்துவது ஏர்ஹோஸ்டஸ்களாக மாறுவதற்கான அடிப்படைத் தேவையாக கருதப்படுகிறது.
நமது குரலில் கோபமோ, பொடிவைத்துப் பேசுவதோ, வெறும் சைகைகளால் கேள்விகளுக்கான பதில்களை வழங்குவதோ இருக்கக்கூடாது. கனிவான குரல், நல்ல மொழியறிவு, சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, சரியான நேரத்திலும் சரியான விதத்திலும் பேசுவது எப்படி என்பதை நன்றாகப் பழகிக் கொள்ள வேண்டும்.
இவை தவிர, ஆடைகளை நேர்த்தியாக உடுத்தப் பழகுவது, கண்களை நேருக்கு நேராகப் பார்த்து பேசுவது, பேசும் போது நமது உடலின் அசைவுகளை நேர்த்தியாக செய்வது (பாடி லாங்குவேஜ்) போன்றவற்றையும் கவனித்து, பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். கோபமாகப் பேசுவதை முற்றிலும் தவிர்ப்பது, உள் நோக்கம் கொண்ட கேள்விகளையும் லாகவமாகக் கையாண்டு நேர்மறை பதில்களை சொல்வதிலும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சிகள் நிச்சயமாக நீங்கள் ஏர்ஹோஸ்டஸ் ஆவதற்கு அடித்தளமாக அமையும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement