Advertisement

உதவி பட்டு ஆய்வாளர் பணிவாய்ப்பு

தமிழக அரசின் பட்டுவளர்ச்சித்துறையில் காலியாக உள்ள 13 உதவி பட்டு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது : 2017 ஜூலை 1 அடிப்படையில் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது நிர்ணயம் இல்லை. மற்ற பிரிவினர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பி.எஸ்சி., செரிகல்சர் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் www.tnsericulture.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் 200 ரூபாய். இதனை Director of Sericulture என்ற பெயரில் சேலத்தில் மாற்றத்தக்கதாக 'டிடி' ஆக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆக., 19ம் தேதி மாலை 5:45 மணிக்குள் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: இயக்குநர், பட்டு வளர்ச்சித் துறை, அஸ்தம்பட்டி, சேலம் - 636007.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.
விபரங்களுக்கு: http://tnsericulture.gov.in/SericultureNov12/AIS-Notification.pdf

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement