Advertisement

ஆயில் இந்தியா நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு

பெட்ரோலிய உற்பத்தியில் இந்தியாவின் அடித்தளமாக திகழும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கான வித்து 1889ல் இடப்பட்டது. அசாம் மாநிலத்தில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட நாளில் இடப்பட்ட விதை தற்போது பெரும் விருட்சமாக மாறி இந்தியாவின் எரிபொருள் தேவைகளை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனத்தில் தற்போது 190 அப்ரென்டிஸ் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள்: பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர் (ஜி., அண்டு இ.,), எலக்ட்ரீசியன், வயர்மேன், ரெப்ரிஜிரேஷன் அண்டு ஏ.சி., மெக்கானிக், கேபிள் லைன்மேன், மெக்கானிக் (எம்.வி.,), மெக்கானிக் (டீசல்), எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பிளம்பர், லேப் அசிஸ்டன்ட் (கெமிக்கல்), இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மெடிக்கல் லேப் டெக்னீசியன் (ரேடியாலஜி), மெடிக்கல் லேப் டெக்னீசியன் - பேதாலஜி, சர்வேயர், டிராப்ட்ஸ்மேன் - சிவில் அண்டு போட்டோகிராபி ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்திய அரசின் அப்ரென்டிஸ் பயிற்சிகளுக்கான பிரத்யேக இணையதளத்தில் www.apprenticeship.gov.in/ பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 2017 ஆக., 16.
விபரங்களுக்கு: www.oil-india.com/oilnew

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement