Advertisement

தேதி சொல்லும் சேதி

ஜூலை 17, 2010 - பன்னாட்டு நீதி நாள்
போர்க் குற்றங்கள், இனப்படுகொலை என, பல வகையான குற்றச் செயல்களை விசாரிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் இந்த நாள் தேர்வு செய்யப்பட்டு அனுசரிக்கப்படுகிறது.

ஜூலை 18, 1918 - நெல்சன் மண்டேலா பிறந்த நாள்
நிறவெறிக்கு எதிராகப் போராடியவர். அமைதிக்கும், மனித உரிமைக்கும், சுதந்திரத்துக்கும் இவர் ஆற்றிய பணியைக் கௌரவிக்க, இவரது பிறந்த நாளை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா. சபை 2009ல் அறிவித்தது.

ஜூலை 19, 1827 - மங்கள் பாண்டே பிறந்த நாள்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தார். சிப்பாய்க் கலகத்துக்கு, காரணமாக இருந்தவர். இவரது நினைவைப் போற்றும் வகையில், இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

ஜூலை 20, 1822 - கிரிகோர் மெண்டல் பிறந்த நாள்
மரபியலின் தந்தை. மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு, ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுவதைக் கண்டறிந்தார். இவற்றை விளக்க 2 விதிகளை உருவாக்கினார். இவை 'மெண்டலின் விதிகள்', எனப்படுகின்றன.

ஜூலை 20, 1919 - எட்மண்ட் ஹிலாரி பிறந்த நாள்
விமானி, மலையேறுபவர். உலகின் வட, தென் முனையை அடைந்த முதல் மனிதர் என்ற பெருமை பெற்றார். மே 29, 1953ல் டென்சிங் நார்கே உடன் இணைந்து, எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து சாதித்தார்.

ஜூலை 20, 1966 - அனைத்துலக சதுரங்க நாள்
பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது, உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒருங்கிணைக்கும் அமைப்பு. 'நாம் அனைவரும் ஒரே மக்கள்' என்பது இதன் குறிக்கோள். இந்தக் கூட்டமைப்பு 1924ல் பாரிஸ் நகரில் நிறுவப்பட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement