Advertisement

ரௌத்ர வீணை

தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருக்கு,
சென்னை, கே.கே.நகர்ல இருக்குற வீட்டு வசதி வாரிய அலுவலகத்துல என்னதாங்க நடக்குது? கடந்த ஜூன் மாசம் அந்த அலுவலகத்துல இருந்து, மனை ஒதுக்கீடு தொடர்பான, 80 கோப்புகள் காணாம போனதா பேப்பர்ல படிச்சேன். நீங்களும் கூட அதை படிச்சிருப்பீங்க. ஆனா, நான் இப்போ சொல்லப் போற விஷயம் உங்க பார்வைக்கு வந்திருக்கான்னு தெரியலை!
நடுத்தர வருவாய் பிரிவைச் சேர்ந்தவங்க வீடு கட்டிக்க மனை ஒதுக்கித் தர்றதா, கடந்த 2011ல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 110 விதியின் கீழே அறிவிச்சாங்க. அடுத்த சில நாட்கள்ல அதுக்கான விளம்பரமும் வந்தது. இறந்து போன என் கணவரோட சேமிப்பு பணத்தை நம்பி நான் அதுக்கு விண்ணப்பிச்சேன்.
விண்ணப்பிச்ச கொஞ்ச நாள்லேயே, ஆலப்பாக்கம் திட்டப் பகுதி 1ல் மனை எண் 'எம்45' எனக்கு ஒதுக்கீடு பண்ணியிருக்கிறதாகவும், 21 நாட்களுக்குள்ளே பணத்தை கட்டிட்டு நிரந்தர ஒதுக்கீடு ஆணையை வாங்கிக்கச் சொல்லியும், கே.கே.நகர் கோட்டத்துல இருக்குற தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துல இருந்து கடிதம் வந்துச்சு. பல ஆண்டுகால கனவு நிறைவேறப் போகுதுன்னு சந்தோஷப்பட்டேன்.
என்னோட சேர்த்து மொத்தம், 63 பேர் இந்த திட்டத்துல தேர்வாகி இருந்தோம். முன் பணம் கட்டி வருஷம் ஆறு ஆகுது. மாதாந்திர தவணையும் தவறாம கட்டி முடிச்சுட்டோம். ஆனா, இதுநாள் வரைக்கும் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட மனையை காட்டவே இல்லை. திட்ட வரைபடத்தை கூட நாங்க இன்னும் பார்க்கலை. ஏன் இப்படின்னு கேட்டா, அதுக்கு முறையான பதிலும் இல்லை!
ஆனா, எங்களுக்கு காரணம் தெரிஞ்சு போச்சு. ஆலப்பாக்கம் பகுதியில எங்களுக்காக ஒதுக்கப்பட்ட மனைகள் எல்லாமே, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால அங்கீகரிக்கப்படாத மனைகள். இந்த பச்சையான உண்மையை அதிகாரிங்க யாரும் இப்ப வரைக்கும் ஒத்துக்க மாட்டேங்குறாங்க.
இப்படியொரு காரியத்தை ஒரு தனியார் நிறுவனம் பண்ணியிருந்தா, எனக்கு இவ்வளவு அதிர்ச்சி இருந்திருக்காது. ஆனா, ஒரு அரசுத் துறை இப்படி பண்ணுனதை நினைக்கும் போது தான் வருத்தமாவும் இருக்கு. ஓட்டுப் போட்டதை நினைச்சு வெட்கமாவும் இருக்கு.
'அல்லல்பட்டு அழுற மக்களோட கண்ணீர் அரசனின் செல்வத்தை அழிக்கும் படை'ன்னு வள்ளுவர் சொல்லியிருக்காரு. அரசனுக்கே அந்த கதின்னா, அரசு அதிகாரிங்க எம்மாத்திரம் பார்த்துக்கோங்க.
- மனை ஒதுக்கீடு செய்யப்பட்டும் பலன் பெறாத வருத்தத்தில், ஆறு ஆண்டுகளாக தவிக்கும் 62 வயது மீனாகுமாரி, சென்னை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Revathi Archana - madurai,இந்தியா

    மா மேதைகள் ஆண்ட பூமியை மண்ணாங்கட்டி எல்லாம் ஆள வந்ததன் விளைவு தான் இது.பட் இதை சாதாரணமா விட முடியாது .அரசாங்கமே அட்டூழியம் பண்ணினா சாதாரண குடிமக்கள் எங்கே போவது. நிச்சயம் இதற்க்கு நீதி கிடைக்க வேண்டும் . ப்ளீஸ் யாரவது ஸ்டெப் எடுங்க .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement