Advertisement

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

சமூக வலைத்தளங்களின் வருகைக்கு பின், நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும், சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, அனைவரது கவனத்தை கவரும் வகையில், வித்தியாசமாக யோசிக்க துவங்கி விட்டனர். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வசிக்கும், சல்மா என்ற பெண்ணுக்கு சமீபத்தில், ஒரே பிரசவத்தில், ஐந்து குழந்தைகள் பிறந்தன. இதில், நான்கு, பெண் குழந்தைகள்; ஒன்று ஆண் குழந்தை.
இக்குழந்தைகளை வைத்து, விதவிதமாக ஏராளமான புகைப் படங்களை எடுத்து, அவற்றை, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார், சல்மா. ஒரு பக்கம், 'லைக்ஸ்' குவிந்தாலும், இதைப் பார்த்த பலரும், 'இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா?' என, ஆச்சரியப்படுகின்றனர்.
— ஜோல்னாபையன்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement