Advertisement

28 லட்சம் ரூபாய் அபராதம்; மாரடைப்பில் விழுந்த பெண்!

சீனா போன்ற நாடுகளில், கண்ணாடி சாமான்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில், சில கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
பொருட்களை வாங்க மற்றும் பார்க்க வரும் வாடிக்கையாளர்கள், அவற்றை உடைத்து விட்டால், அவற்றின் விற்பனை விலை என்னவோ, அதை, அபராதமாக செலுத்த வேண்டும்.
இப்படித் தான், சீனாவின், யுனான் மாகாணத்தில் உள்ள ரூய்லி நகரில் உள்ள ஒரு கடைக்கு சென்ற பெண், கண்ணாடியால் செய்யப்பட்ட, 'பிரேஸ்லெட்'டை, கையில் எடுத்து, பார்க்க, திடீரென, அந்த பொருள், கைதவறி கீழே விழுந்து, உடைந்து விட்டது. இதன்விலை, சில ஆயிரம் ரூபாயாக இருக்கும் என, அலட்சியமாக இருந்த அந்த பெண், அதன் விலையை கேட்டதும், மயங்கி, கீழே விழுந்து விட்டார்.
அந்த, 'பிரேஸ்லெட்'டின் விலை, 28 லட்சம் ரூபாய். மயக்கமடைந்த சிறிது நேரத்திலேயே, அந்த பெண்ணுக்கு மாரடைப்பும் ஏற்பட்டு விட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவர் குணமடைந்து வந்ததும், அபராத தொகையான, 28 லட்சம் ரூபாயை, கறாராக, அவரிடமிருந்து வசூலித்து விட்டனர், அக்கடை உரிமையாளர்கள்.
— ஜோல்னாபையன்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (8)

 • kc.ravindran - bangalore,இந்தியா

  பெரியதோர் வாணிபத்தில் இவையெல்லாம் சகஜம். அதற்குத்தான் இன்சூரன்ஸ் பாலிசி செயல் படுத்தப்படுகிறது. இந்த செய்தி உண்மையா என்பதே சந்தேகம். இருப்பினும் ஒரு கேள்வி. அந்தப்பெண் ஏழை என்றால் ???

 • A shanmugam - VELLORE,இந்தியா

  இந்தியாவில் உள்ள consummer களுக்கு சலுகையை பார்த்தால் இந்திய நாடு மால் வியாபாரிகளுக்கு கோயில் கட்டவேண்டும் என்னென்னில், யார் எந்த பொருளை வேண்டுமானாலும் தொடலாம், கீழே போடலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் கடைகர்ரார்களுக்கு ஒரே ஒரு வார்த்தை "சாரி" என்று சொல்லிட்டால் போதும், கடையை விட்டு வெளியே வந்துவிடலாம். ஆனால், சீனா கடையில் இருக்கும் விதிமுறைகளை இந்தியாவில் கையாண்டால் பெரும்பாலும் Consummer கள் மாரடைப்பில் இருந்திருப்பர் மேலும் அவர்கள் குடும்பமும் பொருள்களின் விலையை மீட்டு கொடுக்க முடியாமல் தற்கொலைக்கு முயற்சிப்பர். உலகில் நம் நாடு இந்தியா போல் ஒரு நாடு எங்கேனும் உள்ளதா?

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   கிழித்தார்கள். கீழே போட்டு உடைத்தால் பில் போட்டு பணத்தை வாங்காமல் விடமாட்டார்கள்.

 • S.P,Pandiyan,Nathikulam -

  இது நம்பும்படியாக இல்லை,அது வெறும் கண்ணாடியால் ஆனது தானே. அதற்கா 28 லட்சம்

  • Manian - Chennai

   கூலி வேலை, கைத்திறன்,ஆன நேரம் போன்ற காரணத்தால் நாம் வாங்கும் மணலால் உண்டாக்கி, வெள்ளி முலாம் பூசின பெல்ஜியம் கண்ணாடி ஏன் விலை அதிகமோ, அதேபோலத்தான் இதுவும். அவங்க வெலை கொடுத்தாச்சே, நீங்க நம்பாட்டியும். கடைக்காரருக்கு காசு கெடைச்சாச்சே

 • sulochana kannan - AUKLAND,நியூ சிலாந்து

  இது கொஞ்சம் அதிகம் தான்...

  • Bala - ,

   கொஞ்சம் ?

  • Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்

   நாம்தான் உஷாரா இருக்கனும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement