Advertisement

இதப்படிங்க முதல்ல....

ஆடியன்சை உஷார்படுத்தும் இயக்குனர் ராம்!
தேசிய விருது பெற்ற, தங்கமீன்கள் படத்தை இயக்கிய ராம், அடுத்து இயக்கியிருக்கும் படம், தரமணி. இப்படத்தை, வயது வந்தோருக்கான கதையில் படமாக்கியிருக்கிறார். அதனால், 'என் படத்தை, 18 வயதுக்கு மேல் உள்ளவர் பார்க்க வந்தால் போதும்...' என்கிறார். மேலும், சென்சார் போர்டில், 'யுஏ' சான்றிதழ் கொடுத்த போது, மறுத்து, 'ஏ' சான்றிதழ் கேட்டுள்ளார். காரணம், 'யுஏ சான்றிதழ் கொடுத்தால், அனைவரும் குடும்பத்துடன் தியேட்டருக்கு வருவர். படத்தை பார்க்கும் போது, கதை வேறு மாதிரியாக இருப்பதால் சங்கடப்படுவர். அதனால் தான், முன்கூட்டியே, 'ஏ' சான்றிதழ் படம் என்பதை சொல்லி விட்டால், தியேட்டருக்கு வருவதற்கு முன்பே உஷாராகி கொள்வர்...' என்றார்.
— சினிமா பொன்னையா

குயின் கன்னட ரீ - மேக்கில் எமிஜாக்சன்!
ரஜினியுடன், 2.0 படத்தில் நடித்துள்ள, எமிஜாக்சன், அடுத்து, இந்தியில், கங்கனா ரணாவத் நடித்த, குயின் படத்தின், கன்னட ரீ -மேக்கில், கதாநாயகியாக நடிக்கிறார். பட்டர்பிளை என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு, தற்போது, எமிஜாக்சனின் சொந்த ஊரான, லண்டனில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக, முதன்முறையாக, சண்டை காட்சிகளில் நடிக்கிறார். அதிர்ஷ்டம் ஆறாய் பெருகுகிறது!
— எலீசா

400வது படத்தில் மகனுடன் இணையும் மம்மூட்டி!
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராகி விட்ட, நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர்சல்மான், தன் தந்தையுடன், ஒரு படத்தில் இணைந்து நடிக்க விரும்புகிறார். அதனால், தற்போது தன், 395வது படத்தில் நடித்து வரும் மம்மூட்டி, அடுத்தபடியாக, நான்கு கதைகளை கேட்டு, ஓ.கே., செய்துள்ளார். அப்படங்களை முடித்த பின், தன், 400வது படத்தில், மகன் துல்கர்சல்மானுடன் இணைந்து நடிப்பதற்கான கதை தேடுகிறார்.
— சி.பொ.,

மீண்டும் இணையும் பிரபாஷ் - அனுஷ்கா!
பாகுபலி படத்தின் இரண்டு பாகத்திலும் இணைந்து நடித்த, பிரபாஷ் மற்றும் அனுஷ்கா இருவரும் அதற்கு முன், பில்லா மற்றும் மிர்ச்சி போன்ற, தெலுங்கு படங்களிலும் நடித்து, 'ஹிட்' கொடுத்தவர்கள். இந்நிலையில், தற்போது, சாஹோ என்ற படத்தில் நடிக்க, தயாராகிறார், பிரபாஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என, நான்கு மொழிகளில் தயாராகும் இப்படத்திலும், அவருக்கு ஜோடியாக, ஒப்பந்தமாகியுள்ளார், அனுஷ்கா. இது, பிரபாஷ் மற்றும் அனுஷ்கா இணையும், ஐந்தாவது படம்.
— சி.பொ.,

தமிழ்ப்படங்களுக்கு ஆங்கில டைட்டில்கள்!
தமிழில் உருவாகும் படங்களுக்கு, தமிழில் தலைப்பு வைத்தால், வரிச்சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மத்திய அரசு விதித்துள்ள, ஜி.எஸ்.டி., என்ற புதிய வரியால், தமிழக அரசின் வரி சலுகை கிடைப்பதில்லை. அதன் காரணமாக, இதுவரை தமிழில் பெயர் வைத்து வந்த தமிழ் திரைப்பட துறையினர், இப்போது, மற்ற மொழிகளை போன்று, ஆங்கிலத்தில் டைட்டில் வைக்க துவங்கி விட்டனர். அவ்வகையில், விஜய் - மெர்சல், விக்ரம் - ஸ்கெட்ச் போன்ற டைட்டில்களில் நடித்து வர, வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்திற்கு, பார்ட்டி என்று பெயர் வைத்துள்ளனர்.
— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

மெரினா நடிகர் படத்தில், என்ட்ரியான ஸ்ரீ நடிகை, மறுபடியும், அவருடன், 'டூயட்' பாடுவதற்கு, கடுமையாக முயற்சித்து வருகிறார்; ஆன போதும், ஏறெடுத்தே பார்ப்பதில்லை, நடிகர். இதனால், கடுப்பான நடிகை, நடிகரை பற்றி தனக்கு தெரிந்த சில ரகசிய விஷயங்களை, 'லீக் அவுட்' செய்து, வேண்டுமென்றே நடிகரை வெறுப்பேற்றி வருகிறார்.

மேனன் நடிகையின் உடம்பு, எடை போட்டிருப்பதை பார்த்து, பலரும், ஆன்ட்டி என்று கிண்டல் செய்கின்றனர். அதனால், இதுவரை, உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இல்லாமல் இருந்து வந்த நடிகை, தற்போது, தினமும் விரதமிருந்து வருகிறார். அத்துடன், சமீபகாலமாக, தன்னை நள்ளிரவு பார்ட்டிகளுக்கு அழைத்து, ஊத்திக் கொடுத்த நடிகர்களின் சகவாசத்தை, முற்றிலுமாக துண்டித்துள்ளார்.

சினி துளிகள்!
* தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகிர் என்ற ஹாலிவுட் படத்துக்காக, தன் ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார், நடிகர், தனுஷ்.
* யங் மங் சங் படத்தில், கும்பகோணத்து பெண்ணாக நடித்திருக்கிறார், லட்சுமி மேனன்.
* ஈட்டி படத்தை அடுத்து, மீண்டும், அதர்வாவுக்கு ஜோடியாக, ஒத்தைக்கு ஒத்த படத்தில் நடிக்கிறார், ஸ்ரீ திவ்யா.

அவ்ளோதான்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement