Advertisement

பிச்சைக்காரன்

நீங்க யாரையாவது காதலிக்கிறீங்களா?
நான் மகி. யாரும் எட்டிப் பார்க்காத எங்க பீட்ஸா கடையில, நான் ஈ அடிச்சுட்டு இருந்த ஒரு நேரத்துல தான் அவனை சந்திச்சேன். பெயருக்கேத்த மாதிரியே அவன் முகத்துல அவ்வளவு அருள்.
ரோட்டுல சுயநினைவில்லாம கிடந்த ஒருத்தருக்கு நான் உதவி செய்றதை அருள் பார்த்திருக்கான். அந்த நிமிஷத்துல இருந்து என் மேல அவனுக்கு அன்பு. ஏனோ, பார்த்தவுடனேயே எனக்கும் அவனைப் பிடிச்சுப் போச்சு. அவனை நேசிக்க ஆரம்பிச்சேன். ஆனா, அருள் ஒரு பிச்சைக்காரன்! அதிர்ச்சி தான்; ஆனாலும், அவன் மேல இருந்த அன்பை என்னால திருப்பி எடுத்துக்க முடியலை.
நான் அவனை விட்டு ஒதுங்கினவுடனே, அவனும் என்னை தொந்தரவு பண்ணாம ஒதுங்கிட்டான். என் பெண்மைக்கும், என் உணர்வுக்கும் அவன் தந்த அந்த மரியாதை எனக்குப் பிடிச்சது. தன் தாய் குணமாகணும்னு வேண்டிக்கிட்டு, பிச்சை எடுத்து தன் வேண்டுதல் நிறைவேத்துறான்னு தெரிஞ்சப்போ அவன் மேல இருந்த அன்பு இன்னும் அதிகமாச்சு. இப்போ, நான் அவனோட மனைவி; மிகப்பெரிய தொழிலதிபரான அருளோட மனைவி.
என் காதல், கல்யாணத்துல முடிஞ்சதுக்கு மூணே மூணு விஷயங்கள் தான் முக்கிய காரணம். ஒண்ணு, அருள் என் குணத்தை பார்த்து என்னை நேசிச்சது. இரண்டாவது, தன் தாய் மேல அவன் அதீத அன்பு வைச்சிருந்தது. மூணாவது, 'தாயை இப்படி பார்த்துக்கிறவன் மனைவியையும் நல்லா பார்த்துப்பான்'னு நான் மனதார நம்புனது. நான் இப்போ நல்லாயிருக்கேன்.
சரி! நீங்க காதலிக்கிறீங்களான்னு நான் எதுக்கு கேட்டேன் தெரியுமா?
'மகி சொன்ன இந்த மூணு விஷயங்கள் நம்ம காதல்லேயும் இருக்குதா'ன்னு நீங்க ஒரு நிமிஷம் யோசிக்கணும், அதுக்காகத் தான்; அவ்வளவு தான்! வாழ்த்துகள்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement