Advertisement

'தேங்காயின் சிறப்பை கண்டுபிடி'மானியம் வழங்கும் மத்திய அரசு

ஒவ்வொரு துறையும், வாரியமும், விவசாயி களுக்கு ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்கள், உதவி, கடனுதவிகளை அறிவித்து வருகிறது. எனினும் போதுமான விழிப்புணர்வு இன்மை யால் மத்திய அரசின் சலுகைகள் விவசாயிகளை நேரடியாக சென்றடைவதில்லை.'தேங்காயின் சிறப்பை ண்டுபிடியுங்கள்' என்ற பெயரில் தேங்காய் மேம்பாட்டு வாரியம் பல திட்டங்களை விளம்பரம் செய்கிறது. தேங்காய் பற்றி விளம்பரம், விழிப்புணர்வு வாசகங்களை வெளியிட்டு வருகிறது. கடன், பயிற்சி, மானியம், கருத்தரங்கு, கண்காட்சி என பல்வேறு துறைகள் 'தேங்காய்' துறைக்கு உதவுகிறது. தற்போது புதிதாக 'தேங்காய் பதப்படுத்தும் யூனிட் (தொழிற் சாலை)' உருவாக்க, தேங்காயில் இருந்து பல பொருட்களை தயாரிக்க நிதி உதவி திட்டம் கொண்டு வந்துள்ளது.
* தொழில் நுட்ப மேம்பாட்டுக்கு அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் சார்ந்த கூட்டுறவு சங்கங்களுக்கு திட்ட செலவில் 100 சதவிகிதம் (அதிகபட்சம் 75 லட்சம் ரூபாய்) நிதி வழங்குகிறது.
* தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், சுய தொழில் முனைவோர், ஆய்வு நிறுவனங்களுக்கு திட்ட செலவில் 75 சதவிகிதம் (அதிகபட்சம் 35 லட்சம் ரூபாய்) நிதி வழங்குகிறது.
* மேம்பாடு, நவீனமயமாக்குதலுக்கும் நிதி உதவி உண்டு.
* அடைக்கப்பட்ட இளநீர், தேங்காய் எண்ணெய், தேங்காய்ப்பொடி, பால் பொடி, சிப்ஸ், கிரீம், இளநீர் லஸ்ஸி, வினீகர், சிரட்டைப்பொடி போன்றவை தயாரிப்பு தொழிலுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
முழு விவரங்கள் மற்றும் விண்ணபிக்க: Coconut Dept Board, PB- 1021, Kera Bhavan, SRV Road, Kochi, Kerala - 682011.
Ph: 0484 237 6265. www.coconutboard.gov.in
எம்.ஞானசேகர்
விவசாய தொழில் ஆலோசகர், சென்னை
93807 55629.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement