Advertisement

மம்மீஸ் ஹெல்த் கிச்சன்!

டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.

பாசி பயறு தோசை!

தேவையான பொருட்கள்:
முளைகட்டிய பாசிபயறு - 1 கப், பூண்டு - 4 பல், இஞ்சி - 1 துண்டு, பச்சை -மிளகாய் - 3, கொத்தமல்லி - சிறிதளவு, தோசை மாவு - 1 கப், உப்பு - தேவையான அளவு, சோம்பு - 1 டீஸ்பூன்.
செய்முறை:
தோசை மாவு தவிர்த்து, அனைத்தையும், கொரகொரப்பாக அரைக்கவும்.
தோசை கல்லில், தோசை மாவை வார்த்த பின், இந்த கலவையை, அதன் மீது ஊற்றி, நன்றாக பரப்பி விட்டு, மூடி வைக்கவும். ஒரு பக்கம் மட்டும் வேக வைத்து எடுத்தால், முளை கட்டிய பாசிபயிறு தோசை தயார்.
இந்த தோசை, மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். மாவிலேயே, சற்று காரம் இருப்பதால் இதற்கு சட்னி தேவையில்லை. இது மிகவும், சத்தான உணவு.
-கே.பாலமாணிக்கம், தேனி.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement