Advertisement

வீ டூ லவ் சிறுவர் மலர்!

சிறு வயதில் இருந்தே, சிறுவர் மலர் இதழின் தீவிர வாசகன். படிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் உண்டு.
ஒருமுறை, நான் எழுதிய வாசகர் கடிதம், சிறுவர் மலர் இதழில் பிரசுரமாகியது. பரிசு தொகையை பெற்ற நான், பேரானந்தம் அடைந்தேன். என் கிராமம், சிறிய கிராமம் என்பதால், என் புகழ், கிராமம் முழுவதும் காட்டு தீயாய் பரவியது.
அன்று எனக்கு சிறுவர் மலர் இதழ் தந்த, ஊக்கம், உற்சாகம், நம்பிக்கையும் தான், கவிதை, கதை, கட்டுரை, ஜோக்ஸ் என, பலவிதமான வடிவங்களில், என் எழுத்துக்கள் வெளிப்பட காரணமாக அமைந்தது. இன்று, என் எழுத்துக்கள் வெளிவராத இதழ்களே இல்லை.
இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது, 'சிறுவர் மலர்' இதழ் தான். வாசகர்களையே, படைப்பாளிகளாக மாற்றி, சாதனை படைக்க வைக்கும் சிறுவர் மலர் இதழுக்கு மிக்க நன்றி.
என்றும் என்னுடைய சாய்ஸ், 'சிறுவர் மலர்' தான்.
- த. அருள்பிரகாஷ், திருப்பூர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement