Advertisement

வாட்டர் ஹீட்டர் வாங்க போறீங்களா?

* வாட்டர் ஹீட்டரில், தொட்டி உள்ளவை, தொட்டி இல்லாதவை என, இரண்டு வகை உண்டு. தொட்டியுள்ள வாட்டர் ஹீட்டரில், அதன் கொள்ளளவு நீரை மட்டுமே சூடுப்படுத்த முடியும். ஆனால், தொட்டியில்லாத வாட்டர் ஹீட்டரில் எவ்வளவு நீரை வேண்டுமானாலும் சூடுப்படுத்தலாம். அதற்கேற்ப மின்சார செலவும் அதிகரிக்கும்
* முதலில் வாட்டர் ஹீட்டரின் கொள்ளளவு, மின்சார பயன்பாட்டின் அளவு, பொருத்த போகும் இடம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் முடிவு செய்யவும்
* தொட்டியுள்ள வாட்டர் ஹீட்டரை தேர்ந்தெடுக்கும் போது, குடும்பத்தில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து தேர்வு செய்ய வேண்டும்
* மூன்று லிட்டர் கொள்ளளவு உடைய வாட்டர் ஹீட்டர், அதிக வாட்ஸ் திறனுடன் வருகின்றன. ஐந்து நிமிடங்களுக்குள், நீர் சூடாகிவிடும். ஆனால், சாதாரண வாட்டர் ஹீட்டரை விட மின்சாரம் அதிகமாக செலவாகும். ஒரு மணி நேரத்திற்கு, மூன்று யூனிட் செலவாகும். சாதாரண வாட்டர் ஹீட்டர், ஒரு மணி நேரத்திற்கு, இரண்டு யூனிட் செலவாகும்
* சோலார் வாட்டர் ஹீட்டரை பயன் படுத்தினால், ஒரு வீட்டுக்கு, ஒரு மாதத்திற்கு, 30 - 60 யூனிட் வரை மின்சாரம் சேமிக்கப்படும். இதை, சூரிய ஒளி விழும்படியாக பொருத்த வேண்டும். நான்கு மற்றும் ஐந்து நபர்களுக்கு மேல் உள்ள குடும்பத்துக்கு, 100 லிட்டர் சோலார் ஹீட்டரை பொருத்தலாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement