Advertisement

கெத்து கண்ணாடி

விதவிதமான கூலிங் கிளாஸ் அணிவதில், சிறுகுழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அதிக விருப்பம் தான். அதிலும், பச்சை, நீலம், சிவப்பு வண்ண கூலிங் கிளாஸ்கள், குழந்தைகளை மிகவும் கவர்ந்தவை.
கூலிங்கிளாஸ், 1920ல் தான் அறிமுகமானது. 1929ல் செல்லுலாய்ட் கூலிங் கிளாஸ்கள் அறிமுகமாயின. இதை, சான்போஸ்டர் என்பவர், அமெரிக்காவிலுள்ள, அட்லான்டிக் சிட்டி மற்றும் நியூஜெர்சி பகுதியில், அறிமுகப்படுத்தினார்.
கடந்த, 1936ல், 'போலரைஸ்ட்' கூலிங் கிளாஸ் வந்தது. இவை சூரிய ஒளி பாதிப்பு, உறுத்துதல் மற்றும் அல்டிராவைலட் பிரச்னைகளிலிருந்து கண்களை பாதுகாத்தது.
சாதாரண கூலிங்கிளாஸை விட, பெரிய அளவில் கூலிங் கிளாஸ்களை அணிவது, 1980ல், 'ரொம்ப பேஷன்' ஆக இருந்தது.
கடந்த, 1961 முதல் 1963ல் அமெரிக்க குடியரசு தலைவர், ஜான் எப். கென்னடி சுட்டுக் கொல்லப்படும் வரை, அவரது மனைவியாகவும், அமெரிக்காவின் முதல் சீமாட்டியாகவும் இருந்தவர், ஜாக்குலின் கென்னடி ஏனாசிஸ். இவர், இத்தகைய பெரிய கண்ணாடியை, 1960களிலேயே அணிந்து, உலகம் முழுவதும் வலம் வந்ததுண்டு.
கண் மற்றும் பக்க வாட்டு பகுதிகளையும் சேர்த்து மூடும், 'டீஷேடு' மற்றும் 'ராப்அரவுண்ட்' கூலிங் கிளாஸ்களும் அறிமுகமாகி, இன்றுவரை பிரபலமாய் உள்ளன.
கூலிங் கிளாஸ் லென்சுகள், கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் எஸ்.ஆர்.,91 என்ற ஸ்பெஷல் பிளாஸ்டிக்கால் ஆனவை.
* கண்ணாடியாக இருந்தால் உடையும்
* பிளாஸ்டிக்காக இருந்தால் கோடுகள் விழும்
* எஸ்.ஆர்.,91 ஸ்பெஷல் பிளாஸ்டிக் உடையாது; கீறல் விழாது
* பிளாஸ்டிக்கில் அக்ரிலிக், பாலிகார்பனேட் மற்றும் சி.ஆர்.,39 அல்லது பாலியுரிதனால் ஆகியவற்றை பயன்படுத்துவர்
* சி.ஆர்.,39 எடை குறைவு. அல்ட்ரா வைலட்டை உள்வாங்காது. ஆக அதையே அதிகம் பயன்படுத்துகின்றனர்
* இவை தவிர, 'கரெக்டிவ் லென்ஸ்' என ஒரு லென்ஸ் உண்டு. இதை அணிந்திருக்கும் சாதாரண கண்ணாடி மீது சொறுகி, அணிந்து, வெயிலை பலர் சமாளிப்பதை காணலாம்
* 'போட்டோ க்ரோமிக்' கண்ணாடிகள், சூரிய ஒளிபடும் போது வண்ணம் மாறும் தன்மை படைத்தவை.
சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், வீரங்கனை களிடம் ஏகப்பட்ட கூலிங் கிளாஸ்கள் இருக்கும். இவர்கள் எங்கு சென்றாலும், நிச்சயம் வாங்குவது கூலிங் கிளாஸ் தான். பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை, சானியா மிர்சாவிடம் ஏராளமான கூலிங் கிளாஸ்கள் இருப்பதாக, அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
என்ன குட்டீஸ்... நீங்களும் கலர், கலரா கெத்து கண்ணாடிய வாங்க கிளம்பிட்டீங்களா...
ஹி... ஹி... ஹி...

* ப்ரேம்கள் பொதுவாக, நைலான், உலோகம் மற்றும் உலோக கலவைகளால் ஆனவை
* நைலான் ப்ரேம்களை, ஸ்போர்ட்ஸ் வீரர்கள் அணிவர். ரப்பர், பிளாஸ்டிக் ப்ரேம்களும் உண்டு
* மூங்கில், ரோஸ்வுட், வால்நட் மற்றும் ஜீப்ரோவுட்டிலும், பிரேம்கள் தயாரிக்கப்படுவது உண்டு

உலகின் மிக விலை உயர்ந்த கூலிங் கிளாஸ்கள் சில...
இவை, அமெரிக்க டாலர் விலையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை, ஒரு டாலருக்கு, 67 ரூபாய் என்ற அடிப்படையில் பெருக்கினால், இவற்றின் இந்திய ரூபாய் மதிப்பு தெரியும். தலை சுற்றினால்... அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
பென்டிலி பிளாட்டினம்!
இதன் விலை, 45ஆயிரத்து, 276 அமெரிக்க டாலர்கள். பிளாட்டினம், மஞ்சள், தங்கம் மற்றும் வெள்ளை தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
எமரால்ட் சன் கிளாஸ்!
ரோமன் அதிபர், நீரோ காலத்திலேயே, இப்படியொரு கூலிங் கிளாஸை அணிந்து, மாட்டு சண்டைகள் முதல் மனித சண்டைகள் வரை அனைத்தையும் பார்ப்பாராம். தங்கம் மற்றும் எமரால்ட் இணைந்த கூட்டணியுடைய கிளாஸ் இது. விலை வெறும், இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் தான்!
டி.ஜி., 2027பி...
இதன் விலை, 3லட்சத்து, 8௪ஆயிரம் அமெரிக்க டாலர்கள். தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
சோப்பர்சன் கிளாஸ்!
இது, 24 காரட் தங்கம், 60 கிராம். முழுமையாக வெட்டப்பட்ட, 51 நதி வைரங்கள், பதிக்கப்பட்ட சன்கிளாஸ் இது. விலை, 4லட்சத்து, ௧0ஆயிரம்
அமெரிக்க டாலர்கள்!
இதெல்லாம் வாங்க நீங்கள் மல்டி
பில்லியனராக போகிறீர்கள் தானே!

- ராஜி ராதா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement