Advertisement

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (60)

குட்மார்னிங் எவ்ரிபடி...
Idioms and phrasesக்கு இத்தனை வரவேற்பு உங்களிடம் இருந்து வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த பகுதியை முடிவுக்கு கொண்டு வரலாம் என நினைத்தால், விடமாட்டீர்கள் போல் உள்ளது.
'வர்ஷி மிஸ்... இதை சொல்லி தாங்க... இன்னும் சில மரபுச் சொற்களை கொடுங்க... ரொம்ப நல்லா இருக்குது' என்று கேட்டிருந்தீர்கள். உங்கள் அன்புக்கும், நம்பிக்கைக்கும், ஆதரவிற்கும், மிக்க நன்றி!
சரி, பாடத்துக்கு போலாமா... உங்கள் விருப்பப்படியே இன்னும் சில மரபுச் சொற்களை தருகிறேன்.
1. Fold up - மடி
2. By chance - எதேச்சையாக
3. Upside down - தலை கீழாக
4. Fly into temper - கோபப்படு
5. From now on - இப்போதிலிருந்து
6. Make a fool of - முட்டாளாக்கு
7. Hold out a promise - வாக்கு கொடு
8. All my life - என் வாழ்க்கை முழுவதும்
9. Make certain - நிச்சயப்படுத்திக் கொள்
10. Make room - இடங்கொடு
11. Make friends with - சினேகம் செய்து கொள்
12. All of a sudden - திடீரென
13. Sooner or later - இப்பொழுதே, பிறகோ
14. Even though - இருப்பினும்
15. Out of the way - முறை தவறிய
16. What next? - அடுத்தது என்ன?
17. What if? - இருந்தால் என்ன?
18. What with wonder - ஆச்சர்யத்துடன் கவனி
19. Bag and baggage - மூட்டை முடிச்சுடன்
20. Once for all - முடிவாக
21. At all costs - எப்படியேனும்
22. Break the ice - வெட்கத்தை விட்டு பேச்சை ஆரம்பி
23. Go to the dogs - நாசமாகப் போ
24. Cut and dry - வெட்டு ஒன்று துண்டு இரண்டாக
25. Eleventh hour - கடைசி நேரத்தில்
26. With all ones heart - இதய பூர்வமாக
27. At the most - அதற்கு மேல் இல்லை
28. Odds and ends - மிச்சம் மீதி
29. Make no difference - வித்தியாசமில்லை
30. As a matter of fact - உண்மையில்
இதை நன்றாகப் படித்து மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். அவ்வப்போது பேசி அசத்துங்க... எல்லாரும் உங்களது ஆங்கிலப் புலமையை கண்டு ஆச்சர்யப்படுவாங்க.

பை... பை! வர்ஷிதா!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement